அந்த ரசிகர் செத்ததுக்கு காரணம் விஜய் தான் – மீரா மிதுன் ஷாக்கிங் வீடியோ.

0
919
meera
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விருதை இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மேலும் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட ரசிகர் தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த பாலா. இவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இறப்பதற்கு முன்னால் பாலா தலைவன் படம் பார்க்காமலே போறேன் என்று விஜய்யை டேக் செய்து ட்வீட் செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

இறப்பதற்கு முன்பாக கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி பாலா போட்ட ட்வீட்கள் இவை, நான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா அந்த கடவுளுக்கு கூட பிடிக்காது போல. என்ன வாழ்க்கைடா. எதுக்கு பொறக்கணும் ,யாருக்காக நாம வாழனும் ,அப்போ அப்போ சந்தோஷத்தை கொடுத்து பரிச்சிகிட்டே இருக்கான் அந்த கடவுள் இதுக்கு மேல என்னால முடியாதுடா மொத்தமா போயிடரன் அப்போவாது எந்த கவலையும் இல்லாம இருக்கலாம்.

- Advertisement -

கண்ணுல இருந்து தண்ணி அதுவா வருது உள்ள எவ்ளோ வலி இருக்குனு அப்போதான் எனக்கே தெரியுது. கடைசில நானும் இப்புடி புலம்ப ஆரமிச்சிட்டேன். ஒரு மனுஷன் எவ்ளோ வலிதான் தாங்குவான் என் வாழ்க்கை full ஆ இழப்புகள் மட்டும்தான் இருக்கு. வந்துட்டுத்தான் இருக்கன் ஆனா இப்போ உனக்கு சந்தோஷமே கிடையதுடான்னு கடவுள் நெனச்சிட்டான் போல. என்னையும் மதிச்சி இவ்ளோ நாள் சப்போர்ட் பண்ணுன உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி என்றும் பதிவிட்டுள்ளார்.

இப்படி ஒரு நிலையில் விஜய் ரசிகர் பாலா தற்கொலை கொண்டதற்கு விஜய் தான் காரணம் என்று கூறியுள்ளார் மீரா மிதுன், அந்த வீடியோவில் பேசியுள்ள மீரா மிதுன், விஜய் ரசிகரின் தற்கொலையை கூட பெரும் பேசும் பொருளாக மீடியாக்காள் காட்டியது. அந்த ரசிகர் வீட்டை பார்க்காமல் ஒரு நடிகரை பற்றி தினமும் பேசிக்கொண்டு வேலைவெட்டியை பார்க்காமல் இருந்திருப்பார். அதனால் அவரது வீட்டில் திட்டி இருப்பார்கள் அதானல் தான் அவர் தற்கொலை செய்திருப்பார் என்று கூறியுள்ளார் மீரா.

-விளம்பரம்-
Advertisement