நான் தர்மத்துக்கு வந்தனா.. ஒழுங்கா கொடுத்துருங்க.. விஜய் டிவிக்கு மிரட்டல் விட்ட மீரா..

0
90484
meera

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்குபெற்ற நடிகையும் மாடல் அழகியுமான மீரா மிதுன் கடந்த சில நாட்களாக பல்வேறு சர்ச்சையான விடீயோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து விடியோவை வெளியிட்ட மீரா, தன்னை திரைப்படத்தில் இருந்து தூக்கியதற்காக, சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படக்குழுவினரையும், அருண் விஜய் நடிப்பில் படமாக்கப்பட்டு வரும் ‘அக்னி சிறகுகள்’ படக்குழுவினரையும் கடுமையாக திட்டி தீர்த்து தனது சமூக வலைதளத்தில் பதிவுகளை பதிவிட்டு வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் பிக் பாஸ் குழுவையும் விஜய் டிவியையும் மிரட்டி தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீராமிதுன். அந்த வீடியோவில் பிக்பாஸ் குழு தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்து பேசியுள்ள மீரா, நியாயமாக நீங்கள் போட்ட ஒப்பந்தத்தின் படி நடந்தால் தான் சம்பளத்தை திருப்பித் தருவீர்கள் என்றால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். மேலும், விஜய் டிவியும் நானும் பல ஆண்டுகளாக ஒரு நல்ல உறவில் இருந்து வருகிறோம் அதை கெடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. நான் அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்காக செய்து முடித்துள்ளேன். மேலும், இதுவரை மிகவும் அமைதியாக காத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், அதற்கான பதில் சரியான முறையில் இல்லை இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இதன் பின்னரும் எனக்கு நடக்க வேண்டிய விஷயங்களும் நான் கமிட் செய்யப்பட்ட விஷயங்களும் எனக்கு கிடைக்கவில்லை என்றால் நான் எப்படிப் போக வேண்டுமோ அப்படி தான் சொல்லுவேன். எனக்கு கிடைக்க வேண்டியதை நான் எப்படி பெறவேண்டும் என்பது எனக்கு தெரியும். எனவே, தேவையானவற்றை விரைவில் செய்யுங்கள். விஜய் டிவி, நான் உங்கள் தொலைக்காட்சியில் எந்த அளவிற்கு உறுதுணையாக இருந்துள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

இதையும் பாருங்க : முதன் முறையாக சந்தித்த கவின்-லாஸ்.. லீக்கான பிக் பாஸ் கொண்டாண்டத்தின் புகைப்படம்..

- Advertisement -

என்னால் உங்கள் தொலைக்காட்சிக்கு எந்த அளவு டிஆர்பி கிடைத்தது என்பதும் உங்களுக்கு தெரியும். மீரா மிதுன் மூலம் நீங்கள் பெற்ற புகழும், டி ஆர் பியும் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். மீராமிதுன் என்ற ஒருவர் இல்லை என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த கதையும் இருந்திருக்காது. இருப்பினும் நான் அனைத்திற்க்கும் பொறுமையாக காத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் ஒப்பந்தம் செய்துள்ள அந்த நபர் எனக்கு சரியான பதிலை அளிக்க வில்லை. மேலும், அவர் என்னிடம் நீ எங்க வேண்டுமானாலும் போ, என்னவ வேண்டுமென்றாலும் செய் என்று மிகவும் மரியாதை இல்லாமல் பேசி வருகிறார். இது சரியான வழி கிடையாது, இங்கே அனைவரும் படித்தவர்கள் தான். அதனால் என்ன ட்ராமா நடந்துகொண்டிருக்கிறது என்பது எனக்கு ஒன்றும் தெரியாமல் இல்லை. எனவே, விஜய் டிவி இதில் தலையிட்டு எனக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டும். இங்கே யாரும் தொண்டுக்காக நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை, இது சேவைக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியும் கிடையாது. எனவே, இதை நீங்கள் புரிந்து கொண்டு ஒரு பிரபலத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் என்னுடன் மீண்டும் ஒரு நல்ல உறவை வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் இதை அனைத்தையும் ஒழுங்காக செய்து முடிக்க வேண்டும். நான் ஏதாவது பெரிய முடிவை எடுப்பதற்குள் இந்த பிரச்சனைகளை நீங்கள் ஒழுக்கமான முறையில் முடிப்பீர்கள் என்றால் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது

இதனை நான் விஜய் டிவிக்கும் எண்டிமால் நிறுவனத்திற்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். தர்மம் இல்லாமல் நீங்கள் செய்யும் செயல்களை கண்டு நான் மிகவும் வருந்துகிறேன். குறிப்பாக உங்களிடம் வேலை செய்து வரும் என்னிடம் பேசிய அந்த நபர் நடந்துகொண்ட மரியாதை குறைவான விதம் மிகவும் தவறு. எனவே, அனைத்தையும் தெளிவாக சொல்லி விட்டேன். எனவே, எனக்கு வர வேண்டிய அனைத்தும் விரைவில் வரவேண்டும். நான் இவ்வளவுநாள் பொறுமையாக இருப்பது பெரிய விஷயம், இதற்கு மேல் எனக்கு பொறுமை கிடையாது. இதன் பின்னர் நான் ஏதாவது முடிவு எடுத்தால் அது மிகவும் பெரிய அளவில் இருக்கும் .அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும், என்று மிரட்டும் தொனியில் பேசி உள்ளார் மீரா.

-விளம்பரம்-

Advertisement