பிரியா ஆனந்த் தன் முகத்தை காபி செய்வதாக கூறிய மீரா மிதுன் – பிரியா ஆனந்த் கொடுத்த பதிலடி.

0
105784
priya
- Advertisement -

சமூக வலைதளத்தில் கடந்த சில வாரமாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு முன்பே இவர் அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அது போக இவர் மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில்தான் பிக்பாஸில் கலந்து கொண்டார் மீராமிதுன். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது சேரன் தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளி விட்டார் என்று இவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும்இவர் டுவிட்டரில் அடிக்கடி சரியான விஷயங்களை பதிவிட்டு வந்தார்.

இதையும் பாருங்க : ஆபாச நடிகை சன்னி லியோன் படத்தின் கமிட் ஆன CWC நடிகை – இந்த டிக் டாக் பிரபலம் வேற இருக்காராம்,

- Advertisement -

அதிலும் கடந்த சில வாரமாக ஹோலிவுட்டு மாபியா என்ற பெயரில் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் மீரா. பின்னர் இதற்கெல்லாம் காரணம் அப்சரா ரெட்டி என்ற திருநங்கை தான் என்றும் அதனால் சூர்யா மற்றும் விஜய் தன்னை மன்னிக்க வேண்டும் என்று கூறி இருந்தார் மீரா.

அதே போல தமிழில் இருக்கும் பல நடிகைகள் தன்னுடைய முகத்தை தான் பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறி வந்த மீரா மிதுன் தற்போது பிரியா ஆனந்தும் தன்னுடைய முகத்தை காப்பி செய்வதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு மற்ற நடிகைகளை போல மௌனம் காக்காமல் பதிலடி கொடுத்துள்ள பிரியா ஆனந்த், மீரா மிதுனின் இந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement