இரவு பார்ட்டியில் மீராவுடன் அனிருத் மற்றும் யுவன். புகைப்படத்தை எடுத்தது இந்த அஜித் பட இயக்குனராம்.

0
24354
Meera
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தவர்தான் நடிகையும் மாடல் அழகியுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்று இருந்தார். ஆனால், அழகி பட்டத்தை வைத்துக்கொண்டு இவர் செய்த பல்வேறு மோசடி செயல்களால் அவரிடமிருந்து அழகிப் பட்டம் பறிக்கப்பட்டது. ஆனால், தற்போதும் தான் ஒரு சூப்பர் மாடல் என்று உதார் விட்டு வருகிறார் மீரா மிதுன்.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் மிகவும் சர்ச்சையான ஒரு நபராக இருந்து வந்தார் மீரா மிதுன். மேலும் இவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில் திடீரென்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மீராமிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னரும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

இதையும் பாருங்க : இரவு பார்ட்டியில் மீராவுடன் அனிருத் மற்றும் யுவன். புகைப்படத்தை எடுத்தது இந்த அஜித் பட இயக்குனராம்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக சேரன் தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளிவிட்டார் என்று இவர் கூறிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் மீராவின் சர்ச்சை குறையவில்லை. அடிக்கடி அரை நிர்வாண புகைப்படங்களையும் ஆண் நண்பருடன் மோசமாக ஆடிய வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

அதேபோல ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் ஏதாவது சினிமா பிரபலங்கள் அல்லது அரசியல் பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் யுவன் சங்கர் ராஜாவுடன் இரவில் பார்ட்டியில் இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : தனது 17 வயதில் எடுத்த முதல் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்ட சொப்பன சுந்தரி புகழ் மனிஷா யாதவ்.

-விளம்பரம்-

மேலும் அந்த புகைப்படம் 2018ல் பார்ட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ள மீராமிதுன் இத்தகைய அழகிய புகைப்படத்தை வெங்கட் பிரபுதான் எடுத்தார் என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அனிருத் மற்றும் யுவன்-ஷங்கர்-ராஜா இருவருமே அஜித்தின் படத்திற்கு இசையமைத்துள்ளார் அதேபோல வெங்கட்பிரபுவும் அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement