இவர் வெற்றி பெற வேண்டும்.! இவர் வெற்றி பெறவே கூடாது.! மீரா கொடுத்த பேட்டி.!

0
5856
Meera
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறியபின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் கண்டன்ட் கொடுத்தது மீரா மட்டும் தான். ஆரம்பித்த சில நாட்களிலேயே மற்ற போட்டியாளர்களின் வெறுப்பை சம்பாதித்தார் மீரா. இருப்பினும் அப்போது மீராவிற்கு கொஞ்சம் மக்கள் ஆதரவு இருந்தது.

-விளம்பரம்-
Image result for meera mithun interview

ஆனால், நாட்கள் செல்ல செல்ல அம்மணி தன் தலையிலேயே மண்ணை வாரி போட துவங்கிவிட்டார். அதிலும் சேரன் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக இவர் ஆடிய நாடகம் தான் இவருக்கு வினையாக அமைந்தது. நிகழ்ச்சி ஆரம்பத்தில் மீராவிற்கு சேரன் தான் ஆதரவாக பேசி வந்தார்.

இதையும் பாருங்க : இதெல்லாம் உங்க அம்மா, தங்கை கிட்ட கேளுங்க.! நான் என்ன கால் கேர்ள்லா.! கடுப்பான ஷாலு.!

- Advertisement -

ஆனால், அவர் மீதே பழி போட்டதால் மீரா மீது ரசிங்கர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டரில் நேரலையில் வந்த மீரா ரசிகர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது இந்த சீசனில் யார் ஜெயிக்க வேண்டும், யார் ஜெயிக்க கூடாது என்று கேள்வி கேட்கப்பட்டது.

Sandy

அதற்கு பதிலளித்த மீரா, இந்த பிக்பாஸ் சீசனில் சாண்டி தான் வெற்றி பெற வேண்டும். சாக்‌ஷி, அபிராமி, ஷெரின் ஆகியோர் வெற்றி பெறக் கூடாது. அவர்கள் என்னை வெளியே அனுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் அது என்ன காயப்படுத்தவில்லை. பெண்ணாக இருந்தும் அவர்கள் என்னை புரிந்துகொள்ளாமல் இருந்தது தான் என்னைக் காயப்படுத்தியது என்று மீரா மிதுன் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement