செல்வதற்கு முன்பாக மீராவிற்கு நோஸ்கட் கொடுத்த குருநாதர்.! மொக்கை வாங்கிய மீரா.!

0
4214
mohan-vaidya
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மூன்றாவது போட்டியாளராக மோகன் வைத்யா நேற்று (ஜூலை 21)வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை அப்பா டாடி, குருநாதர் என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த மோகன் வைத்யா, ரசிகர்களால் இரண்டாவது சினேகன் என்றுதான் அழைக்கப்பட்டு வந்தார். இதற்கு முக்கிய காரணமே இவர் பெண் போட்டியாளரிடம் நடந்து கொண்ட விதம் தான்.

-விளம்பரம்-

எதற்கெடுத்தாலும் ஆண் போட்டியாளரிடம் கோபப்பட்ட மோகன் வைத்யா பெண் போட்டியாளர்களுடன் மட்டும் மிகவும் அன்போடு பழகி வந்தார். அதிலும் எதற்கெடுத்தாலும் பெண் போட்டியாளர்களை கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என்று இருந்து வந்ததால் இவர் மீது ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும், இவரை ட்ரோல் செய்து பல்வேறு மீம்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது.

இதையும் பாருங்க : அரை டிராயரில் காதலருடன் சுற்றுலா புகைப்படத்தை பதிவிட்ட ஆல்யா மானஸா.! கழுவி ஊற்றிய ரசிகர்கள்.! 

- Advertisement -

பெண் போட்டியாளர்களிடம் மிகவும் ஜாலியாக பணிக்கு வந்த மோகன் வைத்யா, மீராவிடம் மட்டும் கொஞ்சம் உர்ரென்று என்று தான் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மோகன் வைத்யா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார் என்று கமல் அறிவித்ததும் அனைவரையும் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து தனது சோகத்தைப் பகிர்ந்து கொண்டார் மோகன் வைத்யா. ஆனால், மீரா அவரை கட்டி அணைக்க வந்த போது அவரை உதாசீனப்படுத்திவிட்டு மோகன் வைத்யா கண்டுகொள்ளாமல் சென்றார். இதனால் மீராவிற்கு கொஞ்சம் அசிங்கமாக ஆகிவிட்டது.

ஆனால், சரவணன் மோகன் வைத்யாகட்டியணைக்க வந்தபோது ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு மட்டும் முடித்துக் கொண்டார். அதன் பின்னர் சாண்டி, கவின் ஆகியோர் தான் வீட்டில் இருந்து வெளியேறுவதை நினைத்து வருத்தப்படவில்லை இல்லை என்று பும்மிக்கொண்டே அழுது கொண்டிருந்தார். அதன் பின்னர் அவரை சமாதானப்படுத்த மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சென்றனர். ஆனால், அப்போதும் மீரா தனியாகத்தான் நின்று கொண்டிருந்தார். அதன் பின்னர் இறுதியாக வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக மீராவை அழைத்து எனக்கு உன் மீது எந்த கோபமும் இல்லை என்று கடைசியில் அவருக்கும் கட்டிப்பிடி வைத்தியத்தை செய்து வெளியேறினார் குருநாதர்.

-விளம்பரம்-
Advertisement