அந்த நாட்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறேன்.! வெற்றி குறித்து பேசிய முகென்.!

0
910
mugen
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் ஓடிக்கொண்டு இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் நிறைவு பெற இருக்கிறது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், மதுமிதா, சாக்க்ஷி, அபிராமி, ரேஷ்மா, கவின், சேரன், வனிதா, தர்ஷன் என்று 12 போட்டியாரல்கள் வெளியேறிய நிலையில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

-விளம்பரம்-

இன்னும் 2 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும். இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள். இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த ஒருவர் இலங்கையை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் என்று அணைத்து மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் பிக் பாஸ் . பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த வண்ணம் இருந்தனர்.

இதையும் பாருங்க : நிறைவடைந்த வாக்கு பதிவு.! 2 மணிக்கு துவங்கிய ஒட்டு எண்ணிக்கை.! எப்படி கணக்கிடறாங்க தெரியுமா.!

- Advertisement -

நேற்றுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் பிக் பாஸ் சீசன் வெற்றியாளர் யார் என்று நாளையை தெரியவர இருக்கிறது. இல்லையேல் இன்றே கூட வெற்றியாளர் யார் என்ற தகவலும் கசியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் கமல் இன்றைய நிகழ்ச்சியை கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார். எனவே, இன்றைய நிகழ்ச்சியில் எதாவது கொண்டாட்டம் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் முகென் கன்பெஷன் ரூமில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். அதில் நான் எது எல்லாம் சரி என்று நினைத்தேனோ அது தவறு என்று உணர்ந்தேன். எது எல்லாம் தவறு என்று நினைத்தேனோ அதை எல்லாம் நான் மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டும். இங்கே இது முடிந்தாலும் வெளியில் புதிதாக ஒரு விஷயம் ஆரம்பிக்க போகிறது அதனை எதிர்ப்பார்த்து காத்துகொண்டு இருக்கிறேன் என்று பேசியுள்ளார்.

-விளம்பரம்-

இது ஒரு புறம் இருக்க, பிக் பாஸ் பட்டத்திற்காக நடைபெற்று வரும் முகென் தான் முதல் இடத்தில் இருந்து வருவதாக நம்பகரமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேற்று வரை பல்வேறு இணையதளங்களில் நடத்தப்பட்டு வரும் ஓட்டிங்கில் முகெனுக்கு தான் அதிக வாக்குகள் விழுந்து வருகிறது. அவரை தொடர்ந்து லாஸ்லியாவும் மூன்றாவது இடத்தில் சாண்டியும், இறுதி இடத்தில் ஷெரினும் இருந்து வருகிறார்கள். எனவே, முதல் நாளிலேயே முகென் முன்னணியில் இருந்து வந்தனர். எனவே, இந்த சீசன் வின்னர் முகென் தான் என்று ரசிகர்களால் பெரிதும் நம்பபட்டு வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement