வெற்றி படத்தை தொடர்ந்து தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட முகேன் – இதான் படத்தின் டைட்டில்.

0
641
mugen

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி உலக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது . மேலும்,விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த மூன்று சீசன்களை விட கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரண மூன்றாவது சீசன் மாஸ்காட்டியது . பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பலர் கலந்து கொண்டனர். அதில் தர்ஷன், லாஸ்லியா, முகன் ஆகிய மூவரும் ஒருவர் தான். தற்போது லாஸ்லியா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

அதே போல தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும் கே எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் ‘ஆண்ட்ராய்டு குட்டப்பன்’ படத்தில் நடிக்க உள்ளனர். அதே போல பிக் பாஸ் 3 ஆம் சீசனில் டைட்டில் வின்னராக வந்த முகேன் முகென் ராவ் பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் என பல திறமைகளை கொண்டுள்ளவர். மலேசியாவின் பாப் பாடகர் என்று தான் முகென் ராவ்வை அழைப்பார்கள். மேலும், பிக் பாஸ் வீட்டில் முகென் ராவ் பாடிய பாடல் செம்ம ஹிட்டாகி உள்ளது. அது மட்டும் இல்லாமல் ” நீதான் நீதான்” என்ற பாடல் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் முகேன்.

இதையும் பாருங்க : சினிமாவும் இதுக்கு விதிவிளக்கல்ல – வீதி பலகையில் எஸ் கே போஸ்டருக்கு விவேக் கருத்து. எஸ் கே ரசிகர்கள் செய்த செயல்.

- Advertisement -

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் முகேன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர். இத படத்திற்கு ‘வேலன் ‘ என்று பெயர் வைத்துள்னனர். இந்த படம் பற்றிய பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று முகேன் அறிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் முகென், ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. ‘வெற்றி’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை இவர் ஏற்கனவே ‘வெப்பம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த படத்திற்கு நிவாஸ் பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக 2018ல் மிஸ் இந்திய World பட்டம் வென்ற அனுக்ரிதி வாஸ் நடிக்கவுள்ளார். மேலும், இந்த படத்தில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை போன்ற படங்களில் நடித்த கிஷோரும் நடிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement