சினிமாவும் இதுக்கு விதிவிளக்கல்ல – வீதி பலகையில் எஸ் கே போஸ்டருக்கு விவேக் கருத்து. எஸ் கே ரசிகர்கள் செய்த செயல்.

0
871
sk
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக். இவரின் காமெடியில் நகைச்சுவையும், சமூக சிந்தனையும் இருக்கும். அதனால் தான் இவரை மக்கள் ‘சின்ன கலைவாணர்’ என்று அழைத்து வருகின்றனர். இவர் மேடை நகைச்சுவை கலைஞராக தான் தனது பயணத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-
https://twitter.com/Actor_Vivek/status/1362344215951384583

இவர் 1987 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். விவேக்கின் படங்களில் வரும் காமெடிகளில் சமூக கருத்துக்களை சொல்வது வாடிக்கையான ஒரு விஷயம் தான். அதனால் தான் இவரை சின்னக் கலைவாணர் என்றும் பட்டப் பெயர் இருக்கிறது.இப்படி ஒரு நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் ஓட்டபட்ட போஸ்டர் குறித்து ட்விட்டர்வாசி ஒருவர் பகிர்ந்த கருத்திற்கு விவேக் பதில் அளித்துள்ளார்.

இதையும் பாருங்க : 85 % கதைய கேட்டும் விஜய் ‘காக்க காக்க’ படத்த வேணான்னு சொல்லிட்டாரு அதுக்கு காரணம் இதான் – கௌதம் மேனன்.

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் டான் படக்குழு கொடுத்த நெகிழ்ச்சியான பரிசை பார்த்து சிவகார்த்திகேயன் நெகிழிந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் பல பிரபலங்களும் சிவகார்த்திகேயனுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் தெரு பலகை ஒன்றில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அந்த புகைப்படத்தை ட்விட்டர் வாசி ஒருவர் பகிர்ந்து இருந்தார்.

-விளம்பரம்-

அதில் ‘சென்னை வடபழனியில் ஒரு தீர்வைத் தேடி கொண்டிருந்தேன் அப்போது இதை பார்த்த போது உங்களின் காமெடி நினைவிற்கு வந்தது நம்முடைய மக்கள் எப்போது பொது அறிவை பெறுவார்கள் உங்கள் ரசிகர்களுக்கு அறிவுரை கூறுங்கள் சிவகார்த்திகேயன் ‘என்று குறிப்பிட்டு விவேக் மற்றும் சிவகார்த்திகேயனின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து இருந்தார். இந்த பதிவை பார்த்த விவேக் ‘ஆர்வமிகுதியால் இவ்வாறு செய்துவிடுகி றார்கள்!! சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல’ என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு வைரலான சில மணி நேரத்தில் சிவகார்த்திகேயன் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்த அந்த வீதி பலகை சுத்தம் செய்யப்பட்டதாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதனை பார்த்த மிக்க நன்றி. இதற்கு பெயர் தான் சமுதாய மாற்றம் !! என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement