பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போவதற்கு முன் மும்தாஜை திட்டிய மமதி.!

0
1504
mamathi
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்த வாரம் எலிமினேஷன் கட்டத்தை நெருங்கி இருந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக மமதி சாரி நேற்று (ஜூன்1 )வெளியேறினார்.

-விளம்பரம்-

Mamathi-and-Mumtaj

- Advertisement -

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் மும்தாஜ் பொன்னம்பலம், அனந்த் வைத்யநாதன், மமதி ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் நேற்று (ஜூன் 1) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கமல் போட்டியாளர்களை சந்த்தித்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேர செல்லப்போவது மமதி என்று அறிவித்ததும் மும்தாஜ் கண்ணில் தண்ணீர் வடிந்தது.

மமதி, சக போட்டியாளர்கள் அனைவரிடமும் விடைபெற்று சென்றார். அப்போது நடிகை மும்தாஜ் அழுது கொண்டே மமதியிடம் “ஸோ சாரி, என்னால்தான் நீ வீட்டை விட்டு வெளியே செல்கிறாய், அதற்கு நான் தான் காரணம் ” என்று கூறினார். மும்தாஜ் தொடர்ந்து அழுது கொண்டே இருக்க அவரை மமதி “ஷட் அப்” என்று கூறி ஆறுதல் கூறினார்.வெளியே வாடி பாத்துக்கலாம் என்று தோழமையாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-

மமதி பிக் பாஸ் வீட்டை விட்டு சென்றதை மும்தாஜால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே மமதி மற்றும் மும்தாஜ் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தனர். மும்தாஜ் என்ன செய்தலும் அதற்கு மமதி உறுதுணையாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.
போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.

Advertisement