கார் EMI கட்ட கூட கஷ்டப்படுறோம், அப்புறம் நாங்க எப்படி அத பண்ண முடியும் – மைனா மீது எழுந்த விமர்சனம் குறித்து யோகேஷ்.

0
544
myna
- Advertisement -

மைனா நிகழ்ச்சியில் நீடிப்பதற்கு பெயிடு ப்ரோமோஷன் செய்கிறார்கள் என்ற சர்ச்சைக்கு அவருடைய கணவர் யோகேஸ் அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மைனா நந்தினியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நந்தினி. இவர் சின்னத்திரையின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதிலும் விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நந்தினி நடித்திருந்தார். அதன் பிறகு இவர் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இடையில் நடிகை மைனா சீரியல் நடிகரும், நடன இயக்குனராக யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.

- Advertisement -

மைனா நந்தியின் திரைப்பயணம்:

ஆனால், மைனாவின் முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு தன்னுடைய விடாமுயற்சியினால் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல் என்று மைனா நந்தினி பிசியாக கலக்கிக் கொண்டு வருகிறார். சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் மைனா நந்தினி விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மைனா:

இதனை தொடர்ந்து இவர் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே மைனா சிறப்பாக விளையாடிக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் மைனா நிகழ்ச்சிக்காக பெயிடு ப்ரோமோஷன் எல்லாம் செய்திருக்கிறார் என்ற ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்து மைனாவின் கணவர் யோகேஷ் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

பெயிடு ப்ரோமோஷன் குறித்து சொன்னது:

அதில் அவர், இந்த நிகழ்ச்சியில் மைனா நீடிப்பதற்காக நீதிபதற்காக பெயிடு ப்ரோமோஷன் செய்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அதெல்லாம் உண்மை இல்லை. உண்மையை சொல்லப்போனால், நாங்கள் புதிதாக கார் ஒன்று வாங்கி இருக்கோம். அதுக்கு இஎம்ஐ கட்டுவதற்கே படாத பாடு படுகிறேன். இரண்டு குடும்பத்தை பார்க்க வேண்டி இருக்கிறது. வருகிற வருமானத்தை வைத்து குடும்பத்தை பார்ப்பேனா? குழந்தையை பார்ப்பேனா? இல்லை அதெல்லாம் விட்டு பெயிடு ப்ரோமோஷன் செய்வேனா? நாங்களும் ப்ரோமோஷன் பண்ணதும் இல்லை.

நிகழ்ச்சி குறித்து சொன்னது:

இந்த நிகழ்ச்சியின் மூலம் வருமானத்தை வைத்து அடுத்து ஒரு வீடு வாங்கலாம். குழந்தைக்கு சேவிங் பிரச்சனை, காருடைய ஈஎம்ஐ கட்டி முடிக்கலாம் என்றெல்லாம் தான் யோசிப்போமே தவிர இதற்காக நாங்கள் பெயிடு ப்ரோமோஷன் செய்யவில்லை. இதெல்லாம் வதந்தி. அதேபோல் இந்த நிகழ்ச்சியில் விக்ரமன் நன்றாக விளையாடி வருகிறார். மைனாவிற்கும், ரக்ஷிதாவிற்கும் இடையே பிரச்சனை என்றெல்லாம் சொல்கிறார்கள். அதெல்லாம் பொய். அவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள். வெளியில் எப்படி இருக்கிறார்களோ அதே மாதிரி தான் உள்ளேயும் இருக்கிறார்கள். 24 மணி நேரம் நிகழ்ச்சியை பார்த்தால் அவர்கள் ரெண்டு பேருடைய நட்பு எல்லோருக்கும் தெரியும் என்று பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement