என்னது, பிக் பாஸ் நமிதாவுக்கு மகள் இருக்காரா ? – அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ.

0
655
namitha
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் என்றும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருந்ததில்லை. அந்த வகையில் இந்த சீசனில் நமிதாவின் வெளியேற்றம் மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வதுசீசன் 60 நாட்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நமிதா மாரிமுத்து என்ற திருநங்கை கலந்துகொண்டிருந்தார். ஆனால், இவர் கலந்து கொண்ட சில வாரங்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

-விளம்பரம்-

இவருக்கும் தாமரை செல்விக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர் வெளியேற்றப்பட்டார் என்று ஒரு பக்கமும். மேலும் இவருக்கு கொரோணா தொற்று ஏற்பட்டதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இன்னொரு பக்கமும் பலவிதமான சர்ச்சைகள் வெடித்தது. ஆனால் இவர் பிக்பாஸ் வீட்டில் விரதம் இருந்தபோது திடீரென்று மயக்கம் போட்டு விழுந்ததால் இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்று பேட்டி ஒன்றில் ஒரு இருந்தார்.

இதையும் பாருங்க : கொரோனாவால் இறந்த மனைவி – திருமண நாளில் அருண் ராஜா பதிவிட்டு உருக்கமான பதிவு

- Advertisement -

கடந்து வந்த பாதையை டாக்கில் பேசிய நமீதா ‘சிறுவயதில் தான் பெண்ணாக மாற சொந்த வீட்டிலேயே பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியிருந்தார். மேலும், இவர் தன்னுடைய தாய் தந்தையரிடம் கூட சில ஆண்டுகள் பேசாமல் இருந்து வந்தார். அப்போது இவருக்கு உறுதுணையாக இருந்தது திருநங்கைகள் தான் என்றும் கூறியிருந்தார்.

அதேபோல கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நமீதாவை தன்னுடைய தத்து மகளாக வளர்த்து வரும் திருநங்கை ஒருவர் பேட்டி அளித்திருந்தார் இந்த நிலையில் நமிதா ஒரு திருநங்கையை தத்து எடுத்து பிடிக்கிறார். அவருடைய பெயர் பிரவீன் மாயா. அவரது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே பிரபல நடிகை ஷகிலா மிளா என்ற திருநங்கை ஒருவரை தத்து எடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement