கொரோனாவால் இறந்த மனைவி – திருமண நாளில் அருண் ராஜா பதிவிட்டு உருக்கமான பதிவு

0
380
- Advertisement -

உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா தொற்றினால் பல லட்சம் உயிர்கள் இதுவரை பலியாகி இருக்கின்றனர். உலக நாடுகளைப் போல இந்தியாவிலும் கொரோனா பல்வேறு நபர்கள் பலியாகினர். அதே போல பல்வேறு சினிமா பிரபலங்களும் இந்த நோய் தொற்றுக்கு உள்ளாகி காலமாகி இருந்தனர். அந்த வகையில் இயக்குனர் நடிகர் பாடகர் என்று பன்முகம் கொண்ட அருண் ராஜா காமராஜ் அவர்களின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று பாதிப்பால் காலமாக இறந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் அருண்ராஜா காமராஜ். தெறி, பென்சில், கபாலி, ஜிகர்தண்டா போன்ற படங்களில் இவர் எழுதிய பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் கன்னக்குழி அழகே என்கிற ஆல்பம் பாடலை எழுதி உள்ளார். அதே போல இவர் கனா படத்தையும் இயக்கி இருந்தார்.

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அருண்ராஜாவும், அவரது மனைவி சிந்துஜாவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சிந்துஜா காலமானார். மனைவி இறந்த போதே அருண் ராஜாவிற்கும் கொரோனா தொற்று குணமாக ஆகாததால் அவர் பாதுகாப்பு உடை அணிந்து வந்து தன்னுடைய மனைவிக்கு இறுதி சடங்கை செய்து இருந்தது பலரை நிகழ்ச்சிகள் ஆழ்த்தியது

மனைவி இறந்த பல மாதங்கள் ஆனாலும் இண்ணமும் தன்னுடைய மனைவியின் நிறைவாக இருக்கும் அருண்ராஜா காமராஜ் அடிக்கடி தன்னுடைய மனைவி குறித்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் இன்று தங்களுடைய திருமண நாளை முன்னிட்டு திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு திருமணநாள் வாழ்த்துக்கள் பாப்பா என்று பதிவிட்டு இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதை கண்ட பலரும் அருண் ராஜாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement