அவரு மேக்கப்பே போட மாட்டாரு – அஜித் பற்றிய உண்மையை சொன்ன அஜித் பட நடிகை.

0
701
ajith
- Advertisement -

சினிமா திரையுலகின் அல்டிமேட் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். மேலும், “ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்ற டயலாக் ஏற்ப மாதிரி வாழ்ந்து வருபவர் தான் தல அஜித். எப்பவுமே அஜித் அவர்கள் படம் புரமோஷன், இசை வெளியீட்டு விழா,அவார்ட் நிகழ்ச்சி என எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது இல்லை. அதுமட்டும் இல்லாமல் நடிகர் அஜித் ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்று இருப்பவர்.

-விளம்பரம்-

தல அஜித் அவர்கள் கடைசியாக மேடை நிகழ்ச்சி என கலந்து கொண்டது முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி உடன் தான். அந்த மேடைக்கு பிறகு அஜித் அவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும், பங்ஷன்களிலும் கலந்து கொள்ளவே இல்லை. அது மட்டுமில்லாமல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட அஜித் சந்தித்து எந்த ஒரு பேட்டியும் கொடுப்பதில்லை. மேலும், நடிகர் அஜித் வாழ்க்கையின் முக்கியமான லட்சியங்களுள் இதுவும் ஒன்றாக வைத்து வாழ்ந்து வருகிறார்.

இதையும் பாருங்க : கடல் கன்னியாக இருக்க ஆசை – நீச்சல் உடை புகைப்படத்தை பகிர்ந்த ரைசா.

- Advertisement -

அதே போல மங்காத்தா படத்திற்கு பின்னர் பெரும்பாலான படங்களில் கூட நடிகர் அஜித் தனது ஒரிஜினல் முடியுடன் தான் நடித்து வருகிறார். கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே முடிக்கு டை அடிப்பார். இப்படி படத்தில் கூட எளிமையை காடைபிடிக்கும் அஜித் படத்தில் மேக்கப் கூட போடுவது இல்லை என்று நடிகை நமிதா கூறியுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நமிதா பின்னர் கவர்ச்சி நடிகையாக வளம் வர துவங்கினார். அந்த சமயத்தில் இவருக்கும் அஜித்துடன் பில்லா படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய நமிதா, அவர் எந்த மேக்கப்பும் ஏதும் பண்ண மாட்டார். வருவாரு என்ன ஷாட், என்ன டைலாக்னு கேட்டு ரெடினு சொல்லிட்டு போய்டுவாரு.

-விளம்பரம்-
Advertisement