கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ” அச்சம் என்பது மடமையடா” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இவர் மலையாளம் ,தெலுங்கு ,தமிழ் என பல மொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கேரளாவில் உள்ள பாலக்காட்டை பூர்விகமாக கொண்டவர். மஞ்சுமா மோகன் மலையாளத்து அழகி என்று தான் அழைப்பார்கள். மேலும், 1990 ஆம் ஆண்டிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் நடிக்க தொடங்கினார்.
அதோடு மஞ்சிமா மோகன் தந்தை ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர்மற்றும் தாயார் ஒரு நடன கலைஞர் ஆவார். அதுமட்டும் இல்லைங்க மஞ்சிமா மோகன் அவர்களுக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வமுடையவர். அதோடு குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நம்ம மஞ்சுமா மோகன் அவர்கள் பிரசாத் இயக்கத்தில் சீனிவாசனின் திரைக்கதையில் “ஒரு வடக்கன் செல்பி” என்ற மலையாள படத்தில் முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் வெளியானதை தொடர்ந்துதான் மஞ்சுமா மோகனுக்கு தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதையும் பாருங்க : தீபாவளிக்கு இப்படி ஒரு மோசமான நிலையா. மஞ்சுமாவை கண்டு பரிதாபபட்ட ரசிகர்கள்.
அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மூலம் மஞ்சுமா மோகன் அவர்கள் தமிழ் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கட்டி இழுத்தார். தன்னுடைய முதல் படத்திலேயே பெரிய அளவு வரவேற்பை பெற்றார். ஆனால், அதற்குப் பின்னர் தமிழில் சில படங்களில் நடித்தார். தமிழில் நடிகை மஞ்சு மோகன் சத்திரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தை தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, எனினும் இவரிடம் கைவசம் தற்போது நான்கு படங்கள் உள்ளன. தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் மஞ்சிமா மோகனுக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது. இது குறித்த அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அது என்னன்னு பார்த்தா! அதாவது சில மாதங்களுக்கு முன்பு மஞ்சிமா மோகன் விபத்தில் சிக்கியுள்ளார். மேலும், அதற்கான புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும்,இது குறித்து மஞ்சுமா மோகன் கூறியது, எதிர்பாராத விபத்து ஒன்று என் வாழ்க்கையில் நடந்து விட்டது. மேலும், அதற்காக என் காலில் அடிபட்டதால் சிறு சிறு அறுவை சிகிச்சைகள் செய்தார்கள். அதனால் நான் இப்போது ஓய்வு நிலையில் இருக்கிறேன் என்றும் பதிவிட்டிருந்தார் மஞ்சுமா.
சமீபத்தில் மஞ்சுமா கம்பியைப் பிடித்தபடி நடந்த அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளததை பார்த்து ரசிகர்கள் செம ஃபீலிங் ஆயிட்டாங்க. விரைவில் குணமடைந்து வர வேண்டும் என மஞ்சிமாவிற்கு வருத்தங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் தனது உடைந்த காலோடு மஞ்சுமா தீபாவளி பண்டிகையை கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தீபாவளி பண்டிகையை இப்படி மஞ்சுமா பரிதாபமாக கொண்டாடுவதை பார்த்து ரசிங்கர்கள் மேலும் வருத்தத்துடன் மஞ்சுமாவிற்கு தீபாவளி வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.