விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி துவங்கியது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம்தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில முன்னாள் போட்டியாளர்களின் சிபாரிசோடு யாரவது கலந்துகொள்வார்கள். அந்த வகையில் கடந்த சீசனில் பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் பாஸ் வீட்டில் இருந்த போதே பாலாஜி முருகதாஸும் யாசிகாவும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
அதே போல பாலாஜியும் தாமும் நண்பர்கள் தான் ஆனால், இப்போது பேசுவது இல்லை என்று கூறி இருந்தார் யாஷிகா. இப்படி ஒரு நிலையில் இந்த சீசனிலும் யாஷிகா சிபாரிசில் பிக் பாஸில் கலந்துகொண்டவர் தான் நிரூப். இவர் ஏற்கனவே லைவ் ஒன்றில் யாஷிகாவை லிப் லாக் அடித்த வீடியோ ஒன்று சமுக வலைதளத்தில் வைரலானது.
இப்படி ஒரு நிலையில் யாஷிகா குறித்து பேசிய நிரூப், தானும் யாஷிகாவும் காதலித்ததாகவும் ஆனால், தற்போது பிரிந்து நண்பர்களாக இருந்து வருதாகவும் கூறி இருந்தார். அதே போல மீடியா துறையில் தனக்கு யாரையும் தெரியாது. அவள் தான் எனக்கு பலரை அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு ஒரு பாதையை அமைத்துக்கொடுத்தார்.
நான் யாஷிகாவின் முன்னாள் காதலர் என்று பலர் கேலி செய்தார்கள். ஏன் ஒரு பெண்ணால் ஒரு ஆண் முன்னேற கூடாதா ? என்று பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவரும் முன்னாள் போட்டியாளரான அபிராமியும் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
அதில், ஒரு புகைப்படத்தில் ஹாப்பி பர்த் டே பேபி என்றும் இன்னொரு புகைப்படத்தில் நீ எனக்கு சொந்தம் என்றும் குய்ப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பலரும் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.