பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சென்றவாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த வண்ணம் இருந்தனர். பிக் பாஸ் வீட்டில் உள்ளே சென்று வந்த அனைவரும் போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்களையும் சில அறிவுரைகளையும் கூறிவிட்டு வந்தனர்.
இதில் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருந்த நித்யா, போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகளை வழப்பிகினார். அப்போது மும்தாஜுடன் பேசும் போதது, உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்னு நெனச்ச. நீங்க ஒரு ஸ்ட்ராங் பர்சன் ஆனா, ரெண்டு பக்கமும் இருக்கற நியாயத்தையும் தெரிஞ்சி பேசின நல்லா இருக்கும். அடுத்தவங்களோட வீக்நெஸ்ஸ ஆயுதமாக உஸ் பண்ணாதீங்க என்று கூறியிருந்தார்.
அதன் பின்னர் நித்யா, அப்படி கூறியது தனக்கு புரியவில்லை என்றும் மும்தாஜ் சக போட்டியார்களிடம் கூறியிருந்தார், அப்போது ரித்விகா, மும்தாஜிடம் கூறுகையில் நித்யா இந்த வீட்டில் 4 வாரங்கள் இருந்துள்ளார். அவர் சுற்றிவளைத்து பேசக்கூடியவர் அல்ல. அவர் வெளியில் இருந்து இந்த நிகழ்ச்சியை பார்த்துள்ளார். அதனால் நீங்கள் அன்பை ஆயுதமாகப் பயன்படுத்துவதாக தெரிந்திருக்கலாம்.அதைத்தான் நித்யாவும் சொல்லி இருப்பார் என்று கூறியிருந்தார்.
Lotsa luv to rithu fr the undrstndng v shrd inside the house!She jus spoke my mind! hope&pray rithu/balaji wins !!DONOT play wit emotions…
— Nithya-Dheju S (@DhejuWE) September 2, 2018
இதையடுத்து சமீபத்தில் நித்யாவிற்கு ஆதரவாக பேசிய ரித்விகா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்த நித்யா, வீட்டின் உள்ளே நான் பகிர்ந்த சில விடயங்களை நன்றாக புரிந்து கொண்ட ரித்விகாவிற்கு நன்றி. அவர் நான் என்ன நினைத்தேனோ அதனை பேசி இருக்கிறார். ரித்விகா, பாலாஜி இந்த போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நம்பிக்கை, அவர்களுக்கு என்னுடைய பிராத்தனையும் என்று பதிவிட்டுள்ளார்.