சினிமாவில் நடிக்க போகும் நித்யா.! என்ன கேரக்டர்னு தெரிஞ்சா சிரிச்சிடுவீங்க.!

0
627
- Advertisement -

சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் தாடி பாலாஜி. சினிமாவில் வாய்ப்பு குறையவே தொலைக்காட்சி பக்கம் திரும்பிவிட்டார். மேலும், கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.   

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் நிகழ்ச்சி முடிவதற்குள் ஒன்றிணைத்து விடுவார்கள் என்று நினைத்துவந்த நிலையில் தற்போதும் இவர்கள் பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர். 

- Advertisement -

பிக் பாஸ் ஷோ பலருக்கும் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியதுபோல், நித்யாவையும் தற்போது கேமரா முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அரசு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி எடுக்கப்பட்டு வரும் ஒரு ஆல்பத்தில் நடித்து வருகிறார் நித்யா. கூடவே, ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறாராம்.

இதுகுறித்து பேசிய நித்யா, எனக்குக் கிடைச்சிருக்கிற கேரக்டர் என் ரியல் லைஃப் மாதிரியே இருக்குங்கிறதுதான் இதுல ஹைலைட். கணவனை ஊக்கப்படுத்துகிற கேரக்டர்’ என்றவர், ‘பாலாஜி சினிமா வாய்ப்பு இல்லாம இருந்த காலத்துல நான் வேலைக்குப் போய் குடும்பத்தை நடத்தினேன். அந்த நாள்கள்ல அவர் விரக்தியா பேசறப்ப அவ்வளவு ஊக்கப்படுத்தியிருக்கேன். ‘நீங்களும் ஒரு நாள் சினிமாவுல நல்ல இடத்துக்கு வருவீங்க’னு அப்பப்ப சொல்வேன். அது நடந்ததது. ஆனா அதுக்குப் பிறகு நடந்ததெல்லாம் வேற மாதிரி ஆகிடுச்சு.

-விளம்பரம்-
Advertisement