வெளிய வந்ததும் இதை தான் தரேன் டா – முதன் முறையாக அசல் கோளாறின் உண்மை பெயரை சொல்லி நிவாஷினி சொன்ன விஷயம்.

0
510
asal
- Advertisement -

அசலை நினைத்து உருகி உருகி நிவாஷினி அழும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நான்காவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

இது பலருக்குமே அதிர்ச்சியை தந்திருந்தது. இவரை தொடர்ந்து முதல் எவிக்சன் நடந்தது. அதில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் இரண்டாவது எவிக்ஷனில் அசல் வெளியேறி இருக்கிறார். இந்நிலையில் அசலை நினைத்து உருகி உருகி நிவாஷினி அழும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பரிச்சியமில்லாத நபராக கலந்து கொண்டு இருந்தவர் அசல். வசந்த குமார் என்ற தனது பெயரை அசல் கொலார் என மாற்றிவைத்து இருக்கிறார். இவர் ‘ஜோர்த்தாலே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார்.

நிகழ்ச்சியில் அசல் – நிவாஷினி:

இதனைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை அசல் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பெண்களிடம் வழிவது, திமிராக பேசுவது என்று இருந்தார். குயின்சி மீது ஆரம்பத்தில் இருந்தே அசல் கொலாருக்கு ஒரு கண் இருந்தது. ஆனால், குயின்சி செட் ஆகவில்லை என்று நினைத்து சிங்கப்பூர் மாடல் அழகி நிவாசினிடம் கடலை போட ஆரம்பித்தார் அசல். அதுமட்டுமில்லாமல் நிவாஸினியிடம் நீச்சல் குளம் அருகில் படுத்து கொண்டு பேசுவது, அவர் மடியில் உட்காருவது, அவரை கடிப்பது போன்ற பல முகம் சுழிக்கும் வேலைகளை செய்து இருந்தார். இது எல்லாம் ரசிகர்களுக்கு கடுப்பேற்றி இருந்தது.

-விளம்பரம்-

அசல் குறித்து நிவாஷினி சொன்னது:

அதோடு அசல் – நிவாஷினி காதலிக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இரண்டாவது எவிக்ஷனில் அசல் வெளியேறி இருந்தார். இதனால் நிவாசினி பயங்கரமாக அழுந்து இருந்தார். இந்நிலையில் அசலை நினைத்து நிவாசினி உருகி பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர், அசல் வெளியே சென்றது நியாயமே கிடையாது. இந்த வீட்டில் எவ்வளவு சண்டை, சச்சரவு செய்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஒன்னுமே செய்யாமல் இருந்த அசலை நீங்கள் வெளியே அனுப்பியது அநியாயம். அவன் இல்லாமல் எனக்கு சாப்பாடு இறங்கவில்லை.

கதறி அழும் நிவாஷினி:

உன்னுடைய சட்டையை நான் எடுத்து வைத்திருக்கிறேன். வெளியே வந்த உடன் தருகிறேன். எங்களுடைய நட்பு புரியவில்லையா? இந்த வீட்டில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஏன் அசலை வெளியே அனுப்பினீர்கள்? நான் கொஞ்சம் கொஞ்சமாக சந்திரமுகியாக மாறிக் கொண்டிருக்கிறேன். நான் எழுந்த உடனே காலையில் முழிப்பது, எனக்காக பேசுவது, எனக்காக எல்லா வேலையும் செய்வது எல்லாம் அசல் தான். அவர் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. டேய் வசந்த உன் சட்டை எல்லாம் எடுத்து வைத்துள்ளேன் வெளிய வந்ததும் அதை துவைத்து கொடுக்கிறேன் என்று அழுது கொண்டு நிவாஷினி பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement