பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பாடி ஷேமிங் குறித்து நிக்சன் கூறியிருக்கும் சர்ச்சை கருத்துதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி 21 நாட்களை கடந்து இருக்கிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் மற்ற பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.
பிக் பாஸ் 7 நிகழ்ச்சி:
இந்த முறை சின்ன பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமையல், கிளீனிங் எல்லாம் செய்யணும் என்று அறிவித்திருந்தார்கள். இந்த சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நபரை கேப்டன் தான் தேர்ந்து எடுப்பார். சொல்லப்போனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு சென்றிருக்கிறார்கள். முதல் வாரமே நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். தற்போது 16 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த வாரத்திற்கான நாமினேஷனில் நிக்சன்,அக்ஷயா,மணி சித்ரா, ஐசு,விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா,விக்ரம் மற்றும் பிரதீப் ஆகிய 11 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் மாயா அல்லது பூர்ணிமா ஆகிய இருவரில் யாராவது வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது விஜய் வர்மா இந்த வாரம் வெளியேறி இருக்கிறார்.
Thambi #Nixen part time la Tailor Ah vela paakraaru pola 😂
— Sriram (@sriram2994) October 21, 2023
Adhaan alava pathi pesraaru. #Vinusha has better standards man. She won’t even come near you.
According to me, she is the prettiest. #BiggBoss7tamil #BiggBossTamil7 #PradeepAntony #PradeepAnthony https://t.co/yrvkRjg1Za
நிக்சன் பேசிய வீடியோ:
இந்த நிலையில் நிக்சன் பேசி இருக்கும் சர்ச்சை கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ராப் பாடகராக நிக்சன் அறிமுகமாகி இருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து நன்றாக விளையாடி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து விளையாடி வருகிறார். இதனால் இவரை ரசிகர்கள் பலரும் ரசிகர்கள் பாராட்டிருந்தார்கள். இந்த நிலையில் நிக்சன் குறித்த ஒரு சர்ச்சை வீடியோ தான் வெளியாகியிருக்கிறது. அதில் நிக்சன், வினுஷா என்னுடைய டைப் கிடையாது. ஒரு பெண் என்றால் ஒரு சரியான உருவமைப்பு இருக்க வேண்டும்.
Didn't expect this from #Nixen !
— Sanam Shetty (@ungalsanam) October 22, 2023
Heights of #bodyshaming #sexist #discriminating mindset!
Is this why #Vinusha got the cold treatment?
I hope @ikamalhaasan sir addresses this.@vijaytelevision @disneyplusHSTam#BiggBossTamil #BiggBoss7tamil https://t.co/KNFojyuQaT
சனம் செட்டி பதிவு:
எது எது எவ்வளவு இருக்க வேண்டுமோ அதெல்லாம் சரியாக இருக்க வேண்டும். அவருடைய மண்டை கொஞ்சம் சின்னதாக இருக்கிறது. மற்றபடி அவருடைய கண், உடை அலங்காரம் எல்லாம் எனக்கு பிடிக்கும் என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலருமே நிக்சனை கண்டித்து வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக பிக் பாஸ் பிரபலம் சனம் செட்டி பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், நிக்ஸனிடம் இருந்து இதை எதிர் பார்க்கவில்லை. உருவக்கேலி மற்றும் பாகுபாடு கொண்ட மனநிலையின் உச்சம். இதனால் தான் வினுஷா இப்படி நடத்தப்படுகிறாரா ? கமல் சார் இதுகுறித்து கவனிப்பார் என்று நம்புகிறேன் என்று கூறி இருக்கிறார்.