அன்று மாயா, இன்று நிக்சன் – குறைவான வாக்குக்குகள் பெற்றும் தப்பித்த நிக்சன். விஜய் டிவி வெளியிட்ட காரணம்.

0
399
nixen
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 9வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் பூர்ணிமா, தினேஷ், ஜோவிகா, மணி, விக்ரம், அனன்யா, கூல் சுரேஷ், விசித்ராஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் விக்ரமும் இந்த வாரம் நாமினேட் ஆகி இருந்ததால் அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வாரம் முழுக்க நடைபெற்று வந்த பல்வேறு தனியார் ஓட்டிங்கில் விக்ரமை விட ஜோவிகாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நேற்றய நிகழ்ச்சியில் ஜோவிகா வெளியேறிய நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் விஜய் வர்மா, அனன்யா, விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், மணி, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்சன், விக்ரம்,விஷ்ணு ஆகிய 13 பேர் மட்டும் உள்ளே இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த வார கேப்டனான விஷ்ணு, ஸ்மால் பாஸ் பிக் பாஸ் வீட்டை பிரித்து இருக்கிறார். இதில் ஸ்மால் பாஸ் டீமில் தினேஷ், மாயா, கூல் சுரேஷ், மணி, அர்ச்சனா ஆகியோரையும் ஸ்மால் பாஸில் அனன்யா, விஜய், பூர்ணிமா, நிக்சன், விக்ரம், ரவீனா ஆகியோரையும் பிரித்து போட்டு இருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் இந்த வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் துவங்க இருக்கியது. அதில் பிக் பாஸில் இருக்கும் அனைவரும் நிக்சன் பெயரை தான் சொல்லி இருக்கின்றனர். இதனால் ஸ்மால் பாஸ் டீமில் இருந்து நிக்சன் ஒருவர் மட்டும் தான் நாமினேட் ஆகி இருந்தார். இதன் மூலம் விக்ரம், பூர்ணிமா ஆகிய இருவரும் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து இருக்கின்றனர்.

-விளம்பரம்-

அதே போல ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் நாமினேஷன் படி அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, மணி ஆகிய 4 பேர் நாமினேட் ஆகி இருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் நிக்சன், அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, மணி ஆகிய 5 பேர் நாமினேட் ஆகி இருகின்றனர். மேலும், இதில் மணி அல்லது நிக்சன் இருவரில் தான் கண்டிப்பாக ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் மிக்ஜாம் புலன் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால், இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது’ என்று அறிவித்து இருந்தது.

இந்த சீசனில் No Eviction வாரமாக இருப்பது இது இரண்டாவது முறை. இந்த சீஸனின் இரண்டாம் வாரத்தில் பாவா செல்லதுரை வெளியேறியதால் அந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வாரத்தில் மாயா தான் வெளியேறுவார் என்று எதிர்பாக்கப்பட்டது. அந்த வகையில் இந்த வாரம் நிக்சன் நிச்சயம் வெளியேறுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் No Eviction என்று அறிவிக்கப்பட்டு நிக்ஸன் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்.

Advertisement