90ஸ் குழந்தைகளின் பேவரைட் சீரியல் கனா காணும் காலங்கள். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்தவர் இர்பான். இதனை தொடர்ந்து இர்பான் ‘சரவணன் மீனாட்சி ‘ தொடரில் சரவணனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பிறகு இர்பான் அவர்கள் சீரியலை விட்டு விட்டு சினிமாவுக்கு வந்து விட்டார். இவர் பட்டாளம், எதிர் வீடு, ரூ, பொங்கி எழு மனோகரா போன்ற சில படங்களில் நடித்து வந்தார். இதில் எந்த படமும் அவருக்கு பெரியதாக அமையவில்லை. இறுதியாக சேரன் நடித்த ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் நடித்து இருந்தார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், பிக்பாஸ் அல்லது குக் வித் கோமாளி இந்த இரு நிகழ்ச்சிகளில் இதில் பங்கேற்க அழைத்தால் நீங்கள் போவீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த இர்பான், நிச்சயமாக பிக்பாஸ் இல்லை. குக் வித் கோமாளி சீசன் 2-வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை நான் மிஸ் செய்துவிட்டேன். ஏனென்றால் எனக்கு நாடகம் போடுவது அல்லது சண்டையிடுவதெல்லாம் பிடிக்காது.
இதையும் பாருங்க : மினி ஷகிலா ரேஞ்சுக்கு மாறியுள்ள SMS பட நடிகை – வெப் சீரிஸில் உச்சகட்ட கிளாமர். வைரலாகும் வீடியோ.
எனவே எனக்கெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சி கண்டிப்பாக எனக்கு செட் ஆகாது. அதே போல நான் இப்போது சமைக்க கற்றுள்ளேன் என்பதால் குக் வித் கோமாளி சீசன் 3-யில் பங்கேற்க ஆவலாக இருக்கிறேன். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்தால் நிச்சயம் இந்த முறை மிஸ் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார் இர்பான்.
அதே போல குக்கு வித் கோமாளியில் பங்கேற்ற யாருக்கும் ஒரு சதவீத நெகடிவ் இமேஜ் கூட ஏற்படவில்லை. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் சுதப்பினாலும் கழுவி ஊற்றும் அளவிற்கு நெகடிவ் இமேஜ் ஏற்பட்டுவிடும். அதனால் தான் உஷாராக இர்பான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பதிலாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் காட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.