பிக் பாஸுக்கு வருவீங்களா..? ரசிகர் கேட்ட கேள்வி..? ஓவியா என்ன சொன்னாங்க தெரியுமா..?

0
338

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கியுள்ளது 4 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். தற்போது நடைபெற்று வரும் சீசன் 2 நிகழ்ச்சியில் சீசன் 1 போட்டியாளர்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர்.

முன்னாள் போட்டியாளர்களான காஜல், ஜூலி, கணேஷ் வெங்கட்ராமன் தவிர மற்ற அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்து சென்று விட்டனர். இதில் ஓவியா மட்டும் சீசன் 2 நிகழ்ச்சியின் ஆரம்ப விழா அன்றே சிறப்பு விருந்தினராக வந்து சென்றுவிட்டார்.

ஆனால், சீசன் 1 போட்டியாளர்கள் பெரும்பான்மையானோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்த போது ஓவியா மட்டும் வராமல் இருந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியாக இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் ஓவியாவின் வலைதள பாகத்தில், உங்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் எதிர்பார்க்கலாமா என்று கேட்டுள்ளார்.

ரசிகரின் இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள ஓவியா, எஸ், கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் 4 நாட்கள் மற்றுமே உள்ள நிலையில் ஓவியா எப்போது வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.