தன்னை பற்றி தவறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகர் பயில்வால் ரங்கநாதனுக்கு ஓவியா கடுமையான தன் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். தமிழில் வில்லன் நடிகராக பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் பத்திரிகையாளராகவும் இருந்து வருகிறார். அதேபோல நடிகர்கள் நடிகைகள் குறித்தும் அடிக்கடி பல்வேறு சர்ச்சையான விஷயங்களை கூறி பிரபலமடைந்தவர் என்று தான் சொல்ல வேண்டும்.
வீடியோவில் 8 : 29 நிமிடத்தில் பார்க்கவும்
அந்த வகையில் சமீபத்தில் இவர் ஓவியா குறித்து பேசியுள்ளது ஓவியாவை மிகவும் எரிச்சல் அடையச் செய்திருக்கிறது.”டார்ச்சர் செய்ததால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள்” என்கிற தலைப்பில் கடந்த ஜூலை மாதம் பயில்வான் ரங்கநாதன் தண்டோரா வாய்ஸ் எனும் யூடியூப் சேனலில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஓவியா குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், ஓவியா வெள்ளந்தி என்று சொல்வதா இல்லை பெண் சுதந்திரவாதி என்று சொல்வதா என்பது எனக்கு தெரியவில்லை.
இதையும் பாருங்க : பிக் பாஸ் கமல், சர்வைவர் அர்ஜுன், மாஸ்டர் செப் Vjs – யார் யாருக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா ?
ஓபனாக சொல்லப்போனால் ஆமாம்,நான் தண்ணி அடிப்பேன்,பப்பிற்க்கு போவேன், யாரை வேண்டுமானாலும் காதலிப்பேன், யாரோடு வேண்டுமானாலும் இருப்பேன் என்று ஓப்பனாக கூறியிருக்கிறார் ஓவியா. அதுமட்டுமில்லை மகாபலிபுரத்தில் அவர் தங்காத ஹோட்டல் கிடையாது. நடிப்புத் தொழிலோடு சேர்த்து அட்ஜஸ்ட்மெண்ட் இருந்தால் பரவாயில்லை.
ஆனால், அட்ஜஸ்ட்மெண்ட் மட்டுமே இருந்தால் அந்த நடிகைக்கு வேறு முத்திரை குத்தி ஒதுக்கி வைத்துவிடுவார்கள். அந்த வகையில் நடிப்புத் திறமை இருந்தும் வேறு வழியில் சம்பாதிக்க நினைத்ததால் நடிகை ஓவியாவிற்கு மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார். இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோவை பார்த்து கடுப்பாகி இருக்கிறார் ஓவியா.
அதில், இதுவும் ஒருவகையான பாலியல் அத்துமீறல் தான் என பயில்வான் ரங்கநாதனுக்கு பக்காவான பதிலடியை கொடுத்திருக்கிறார். ஓவியாவின் இந்த பதிவிற்கு கமன்ட் செய்துள்ள சின்மயி, இவர் எப்போதும் இப்படித்தான் பேசுவார் ஆனாலும் இவரை வைத்து பலர் வீடியோ வெளியிடுகிறார்கள் அதற்கு காரணம் இவரின் பேச்சுக்களை கேட்கும் ரசிகர்கள்தான் என்று கூறியிருக்கிறார். அதேபோல ஓவியாவின் ஆர்மி ‘பயில்வான் ரங்கநாதன் கைது செய்ய வேண்டும்’ என்று பதிவிட்டதற்கு ‘நானும் அதை ஒப்புக் கொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் ஓவியா.