பிக்பாஸ் 2 வீட்டில் முதல் ஆளாக சிறைக்குள் செல்பவர் இவரா..? வெளிவந்த தகவல்.!

0
741
Bigg-Boss

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அமைக்கப்பட்டிருந்த செட் போலவே இந்த ஆண்டும் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. ஆனால், பிக் பாஸ் 2 வீட்டில் ரசிகர்களுக்கு சற்று மர்மமாக தெரிவது கார்டன் ஏரியாவில் இருக்கும் பிக் பாஸ் சிறை தான்.

bigg boss

இந்தியில் பிக் நிகழ்ச்சி 11 சீசன்களை கடந்துள்ளது. முதன் முதலில் இந்தி பிக் பாசில் தான் இந்த பிக் பாஸ் சிறை அறிமுகம் செய்யபட்டது. இந்த சிறையில் ஒரு படுக்கையும், ஒரு விளக்கு மட்டுமே இருக்கும் மற்றபடி எந்த ஒரு வசதிகளும் இருக்காது. இந்நிலையில் தற்போது தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சிறையில் முதல் கைதியாக நடிகர் பொன்னம்பலம் தான் உள்ள செல்ல போகிறார் என்று ஒரு சில தகவல்கள் பரவி வருகிறது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சயின் இரண்டாம் வாரமான இன்று (ஜூலை 8) இரண்டாவது போட்டியாளராக அனந்த் வைத்தியநாதன் போட்டியில் இருந்து வெளியேருகிறார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி இருந்த வண்ணம் இருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சிறையில் செல்ல அனந்த வைத்தியனதான் நடிகர் பொன்னம்பலத்தை இன்று பரிந்துரை செய்யபோவதாக தகவலகள் வெளியாகி உள்ளது.

ponambalam actor

ஆனால், நடிகர் பொன்னம்பலம் இதற்கு மறுப்பு தெரிவித்து அனந்த்திடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாராம். இவர்களில் விவாததிற்கு நடிகர் கமல் பஞ்சாயத்து செய்துள்ளதாகவும் தகவலகள் பரவி வருகிறது. ஆனால், எதற்காக பொன்னம்பலத்திற்கு சிறை தண்டனையை அனந்த் பரிந்துரை செய்கிறார் என்று கேள்வி எழுகிறது. ஒருவேளை இன்று அனந்த் வெளியே செல்ல இருபத்தால் அவருக்கு யாருக்காவது தண்டனை அளிக்க சலுகை வழங்கப்பட்டுள்ளதா? இல்லை வேறு ஏதாவது புதிய டாஸ்க் நடைபெருகிறதா? போன்ற கேள்விக்கு இன்று ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் தான் விடை தெரியும்.