மருத்துவ மனையில் பரிதாப நிலையில் பொன்னம்பலம் – கமலை தொடர்ந்து ரஜினி செய்துள்ள உதவி. என்ன தெரியுமா ?

0
3198
ponnambalam
- Advertisement -

பிரபல நடிகரான பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியானது. பொன்னம்பலம், தமிழ் சினிமாவில் ஒரு சண்டை கலைஞராக வந்தவர் பின்னர் இவர் சண்டை பயிற்சியாளர் பின்னர் ஒரு இரு காட்சிகளில் நடிக்கவந்தார். பிறகு தமிழ் சினிமாவில் மிக சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்தவர். பின்னர் இயக்குனர் ஹீரோ நகைசுவை என்று பல அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர். தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் அஜித் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் வில்லன் நடிகராக நடித்து வந்தவர் நடிகர் பொன்னம்பலம் . இந்த நிலையில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு திரு கமல்ஹாசன் உதவி வருகிறார். மற்றும் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகிறார்.

இதையும் பாருங்க : ஷூட்டிங்கு போன மாசம் வர்மாட்ட சொன்ன, இப்போ சீரியலே முடிச்சிட்டாங்க – புலம்பிய அழகு சீரியல் ஸ்ருதி.

- Advertisement -

இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார். தற்போது பொன்னம்பலத்தின் உடல் நிலை மோசமாக மாறியுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள பொன்னம்பலம் எனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன்.

ponambalam

என் மகன், மகள் படிப்பு செலவை கமல் சார் ஏற்றுக்கொண்டார். எனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ரஜினி சார் ஏற்றுக்கொண்டார். என்று கூறியுள்ளார். நடிகர் பொன்னம்பலம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே குடிப்பழக்கத்தால் தனது சிறுநீரகம் 40 சதவீதமும், ஈரல் 70 சதவீதமும் சேதமடைந்து விட்டது என்று சென்றாயனிடம் கூறி வருத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement