விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த சீசன் துவங்கியதில் இருந்து பிரதீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது. எனவே அவரை டார்கெட் செய்து பல விஷயங்களை செய்தனர். இதற்கு ஏதுவாக பிரதீப் பேசிய சில அநாகரிகமான வார்த்தைகளும் சில எல்லை மீறி செயல்களும் அவரது எந்த வெளியேற்றத்திற்கு காரணமாகிவிட்டது.
https://twitter.com/storytimewithk/status/1722286396973498874?s=48
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்கின் போது கூல் சுரேஷ் பிரதீப் தாய் படிக்கும் சொல் ஒன்றே பேசி விட்டதாக சர்ச்சை வெடித்தது இதனால் மற்ற போட்டியாளர்களும் பிரதீப் மீது கடும் அதிருப்தி அடைந்தனர்.எனவே இந்த வாரம் கமல் சாரிடம் இதுகுறித்து முறையிட போவதாக தான் மாயா மற்றும் அவரது குழுவினர் முடிவெடுத்தார்கள். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் பிரச்சனைகள் இருந்து விலகி பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வேறு ஒரு புதிய பஞ்சாயத்தை கிளப்பி விட்டார்கள்.
ஆனால், இதுனால் வரை பிரதீப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அப்படி என்ன நடந்து கொண்டார் என்பதை ஒரு மணி நேர நிகழ்ச்சியிலோ 24 மணி நேர லைவ் நிகழ்ச்சியிலோ காண்பிக்கப்படவில்லை. பிரதீப் என்னதான் மோசமாக பேசியிருந்தாலும் அவரை ஒரு உவமனைசராக முத்திரை குத்தி வெளியில் அனுப்பி இருப்பது அவரது எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும் இந்த விஷயத்தில் கமல் கூட யோசிக்காமல் செய்துவிட்டார் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது.
https://twitter.com/itzsekar/status/1722303910327795948?s=48
பிரதீப் வெளியேற்றத்திற்கு மாயா&கோ தான் முக்கிய காரணம் என்றாலும் கமல் இந்த விஷயத்தை தீர விசாரிக்காமல் செயல்பட்டுவிட்டார் என்பதே பலரின் வாதமாக இருந்து வருகிறது. பிரதீப்பிற்கு நடந்தது அநீதி அவரை மீண்டும் பிக் பாஸில் கொண்டு வர வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மேலும், கமலை கடுமையாக விமர்சித்தும் பல விதமான பதிவுகளும் வைரலாகி வருகிறது.
https://twitter.com/ungalsanam/status/1721871356688810468
கமலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான KHபடத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவிற்கு கீழ், கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்வதை விட பிரதீப்பிற்கு ஆதரவாக தான் கமெண்டுகள் குவிந்து வந்தது. இப்படி ஒரு நிலையில் ரவீனா மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரும் பிரதீப்பால் தங்களுக்கு ஆபத்து இல்லை என்று நாங்கள் சொல்லவே இல்லை, கமல் சார் தான் பெண்கள் safety என்ற விஷயத்தை சொன்னார் என்று அந்தர் பல்டி அடித்து உள்ளனர்.
View this post on Instagram
இதுகுறித்து பேசிய பூர்ணிமா ' பிரதீப் செய்ததை எங்களால் சமாளிக்க முடியும். ஆனால், இவர் செய்ததை கமல் சாரால் பொறுக்க முடியவில்லை என்று அவர் தான் அந்த ஆக்ஷன் எடுத்தார். கூல் சுரேஷ் அண்ணாவை பிரதீப் இப்படி பண்ணன்னு தான் ரெட் கார்ட் தூக்கினேன். ஆனால், அவங்க Red Card கொடுத்தது Women Safetyகாக என்று கூறியுள்ளார். மேலும், ரவீனா பேசுகையில் ' அவன் Unsafe என்று சொல்லவில்லை Uncomfortable என்று மட்டும் தான் சொன்னோம்' என்றும் கூறியுள்ளார்.




