விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 65 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் தான் ப்ரஜன். பிரஜன் நிகழ்ச்சியில் நன்றாகத்தான் விளையாடி வந்தார். இருந்தும் இவர் கடந்த வாரம் எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேறியது பலருக்குமே அதிர்ச்சியாக தான் இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு பிரஜன் வெளியிட்ட வீடியோவில், நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 30 நாட்களுக்கு மேல் இருந்திருக்கிறேன்.
பிக் பாஸ் 9:
காரணம் ரசிகர்களாகிய நீங்கள் தான். நீங்கள் கொடுத்த அன்பும் ஆதரவால் தான் என்னால் இவ்வளவு நாட்கள் இருக்க முடிந்தது. அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து என்னை வெளியேற்றியது எதிர்பார்க்காத ஒன்றாகத்தான் இருக்கிறது. நான் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இரண்டு வாரத்திற்கு முன்பே நான் வெளியேற மாட்டேன் என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தக் காரில் என்னை வெளியே அனுப்பும் போது கூட மீண்டும் வருவேன் என்று சொன்னேன். அதேபோல் தான் நடந்தது. ஆனால், இப்போது அந்த மாறி விட்டது.
https://www.youtube.com/watch?v=o3lMw88uRBU
ப்ரஜின் வீடியோ:
சிலர் எனக்கு மெசேஜ் செய்து, உங்களை அனுப்புனது அன்பேர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்க்கும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. நாம் ஏதோ விளையாடி இருக்கிறோம் என்று புரிகிறது. அதோடு என்னுடைய விளையாட்டில் சில மாற்றம் தேவை என்று விஜய் சேதுபதி சொன்னதும் நான் என்னுடைய விளையாட்டையும் மாற்றினேன். ஆனால், அதிரடியாக வெளியேற்றப்பட்டு விட்டேன். அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

எலிமினேஷன் பற்றி சொன்னது:
நன்றாக விளையாட வேண்டும் என்று நினைத்த நேரத்தில் இப்படி நடந்தது. சிலர், உங்களை பிளான் பண்ணி தூக்கிட்டாங்க என்று சொல்கிறார்கள். இது ஒரு விளையாட்டு, அது அப்படித்தான் இருக்கும். எது நடந்ததோ அதை விட்டு நாம் நகரத் தொடங்கி விட வேண்டும். அதுபோல என்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நான் நகரப் போகிறேன். இனி தொடர்ந்து நான் படங்களில் நடிக்கப் போகிறேன். அதற்கு மக்கள் எனக்கு சப்போர்ட் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.






