‘எல்லாருக்கும் பத்துமான்னு சாப்பிடுங்க’ – அப்போ இது என்ன ? குறும்படம் போட்டு பிரியங்காவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
540
priyanka
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 66 நாட்களை கடந்து விறுவிறுப்புடனும், பல எதிர்பார்ப்புகளுடனும் சென்று கொண்டிருக்கின்றது. கடந்த சீசன்களை விட இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. வழக்கம்போல் இந்த முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பும் சச்சரவும் தொடங்கிவிட்டது. மேலும், கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து குறைந்த வாக்குகள் எண்ணிக்கையில் அபிஷேக் ராஜா வெளியேறி இருந்தார்.

-விளம்பரம்-

அதேபோல் கமலும் கொரோனாவில் இருந்து குணமாகி மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரிச்சயமான முகங்களில் ஒருவராக பிரியங்கா இருக்கிறார். விஜய் டிவியில் மிகப் பிரபலமான தொகுப்பாளினியாக திகழ்பவர் பிரியங்கா. அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை இவர் தான் தொகுத்து வழங்கி வந்தார். இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருடைய பெயர் ரசிகர்கள் மத்தியில் டேமேஜ் ஆகி வருகிறது என்றே சொல்லலாம்.

- Advertisement -

மேலும், இவர் நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை இவருடைய குரலே பிக்பாஸ் வீட்டில் அதிகம் ஒலிக்கிறது. அந்த அளவிற்கு இவர் பிக்பாஸ் வீட்டில் பல சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறார். அதிலும் இந்த முறை கமலை விட ரசிகர்கள் தான் அதிகம் குறும்படம் போட்டு காட்டி இருக்கிறார்கள். அதிலும் அதிக குறும்படம் பிரியங்கா தான் வாங்கி இருக்கிறார். பிரியங்கா வீட்டில் உள்ள தாமரை, அக்ஷரா, அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ராஜு, நிரூப் போன்ற பல போட்டியாளர்களுடன் சண்டை போட்டிருக்கிறார். அதனால் இந்த முறை பிக் பாஸ் வீட்டில் வனிதா என்று பிரியங்காவை தான் சொல்கிறார்கள்.

அதுமட்டும் இல்லாமல் சில நாட்களாகவே பிரியங்காவின் செயல் ரசிகர்கள் மத்தியில் எரிச்சலடைய வைக்கிறது. அந்தவகையில் இன்றைக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் பிரியங்கா கூறியது, எல்லோரும் சாப்பிடும்போது மற்றவர்களுக்கும் சாப்பாடு இருக்கிறதா? என்று பார்த்து சாப்பிடுங்கள். சாதம்,ஊறுகாய் என்று எது எடுக்கும்போதும் மற்றவர்களுக்கும் வேண்டும் என்று நினைத்து பார்த்து சாப்பிடுங்கள் என்று பிரியங்கா சொல்லி இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்து போய் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இவர் செய்த வேலைகளை குறும்படமாக வெளியிட்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதில் ஒருவர் கூறியது, கொள்கை உடைய உரக்கச் சொல் கட்சியின் தலைவர் திருமதி பிரியங்கா அவர்களே, நீங்கள் அடுத்தவர்களின் சாப்பாட்டை திருடி சாப்பிட்டிருக்கிறீர்கள். அது உங்களுக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும். அதை உணர்ந்து புரிந்து பேசுங்கள் என்று கூறி அவர் திருடி சாப்பிட்ட வீடியோக்களை குறும்படமாக வெளியிட்டு இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கண்டிப்பா இந்த வாரம் கமலிடம், பிரியங்காவிற்கு நல்ல ஆப்பு இருக்கிறது என்றும் கலாய்த்து வருகிறார்கள். இதனால் இனிவரும் காலங்களில் பிரியங்கா பிக் பாஸ் வீட்டில் நீடித்து இருப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement