வீட்டில் பிறந்த முதல் வாரிசு – குழந்தையை கையில் ஏந்தியபடி பிரியங்கா வெளியிட்ட புகைப்படம். ரசிகர்கள் வாழ்த்து மழை.

0
971
Priyanka
- Advertisement -

தொகுப்பாளினி பிரியங்காவின் வீட்டில் பிறந்த முதல் குழந்தையை அவர் கையில் ஏந்தி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிரியங்கா. தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள். அதில் தற்போது விஜய் தான் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். மேலும், இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது.

-விளம்பரம்-

இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரியங்கா திருமணத்திற்க்கு பிறகு தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

இதையும் பாருங்க : டான் படத்தை பார்த்துவிட்டு ராமதாஸ் சொன்ன விமர்சனம் – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

- Advertisement -

பிரியங்கா பற்றிய தகவல்:

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாகியாக தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சியில் இவர் நடுவராகவும் பங்கு பெற்று இருந்தார். சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள ப்ரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதோடு இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த நபர் என்றால் சிலர் தான். அதில் தொகுப்பாளினி பிரியங்காவும் ஒருவர்.

This image has an empty alt attribute; its file name is image-44.png

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி:

மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி இருந்தார். பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். அதுமட்டும் இல்லாமல் பல முறை எவிக்சனில் பிரியங்கா வந்து இருந்தாலும் மக்கள் அவரை காப்பாற்றி இருந்தார்கள். பிக் பாஸ் சீசன் 5ல் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் நிகழ்ச்சியில் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-222-578x1024.jpg

பிபி ஜோடிகள் நிகழ்ச்சி:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா வழக்கம் போல் தன்னுடைய தொகுப்பாளினி வேலையை தொடங்கி விட்டார். மேலும், இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். அதில் அவர் செய்யும் காமெடி குறும்பு வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்கள். இதனால் இவரை லட்சக்கணக்கான நபர்கள் பாலோ செகிறார்கள். தற்போது பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

வீட்டில் பிறந்த முதல் குழந்தை :

இப்படி ஒரு நிலையில் பிரியங்காவின் தம்பி மனைவிக்கு விரைவில் குழந்தை பிறக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘ஆண்டி கிட்ட வா மா என்று குழந்தையை குறித்து பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் ரோகித்துக்கு அழகிய குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை கையில் ஏந்தியபடி பிரியங்கா போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த பதிவில் பிரியங்கா “Iha ❤️ Chiya” என பதிவிட்டுள்ளார்.

Advertisement