டான் படத்தை பார்த்துவிட்டு பா ம க தலைவர் ராமதாஸ் சொன்ன விமர்சனம் – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
555
- Advertisement -

டான் படத்திற்கு ராமதாஸ் போட்டிருக்கும் ரிவ்யூ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பாஸ்கரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தில் கண்டிப்புடன் இருக்கும் தந்தையாக சமுத்திரக்கனி நடித்து இருக்கிறார்.

- Advertisement -

டான் படத்தின் கதை:

இதனால் சிவகார்த்திகேயனை அதிகமாக திட்டுகிறார் சமுத்திரக்கனி. எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் முயற்சிக்கிறார். அப்போது கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் எஸ் ஜே சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் டிகிரி வாங்கினாரா? தன் தந்தையின் எண்ணத்தை முறியடித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

Sivakarthikeyan Don Review | சிவகார்த்திகேயன் டான் விமர்சனம்

டான் படத்தின் பாராட்டு:

மேலும், இந்தப் படம் அப்பா மகனின் பாசத்தை அழகாக காண்பித்து இருந்தது. குறிப்பாக இளைஞர்களை படத்தை திரையரங்கில் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் இப்படத்தை பார்த்த ரஜினிகாந்தும், சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். அதோடு பல பிரபலங்கள் டான் படம் குறித்து நல்ல விமர்சனத்தை கொடுத்திருந்தார்கள். இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் டான் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

பாமக நிறுவனர் ராமதாஸ் டீவ்ட்:

இது தொடர்பாக அவர் ட்விட்டர் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் பார்த்தேன். பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் என்று பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி இவர் பதிவிட்டு இருந்து பதிவு சோசியல் மீடியாவில் வைரலானது. இதைப் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயனும் நன்றி தெரிவித்து இருக்கிறார்.

சிவா நடிக்கும் படங்கள்:

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படம், தெலுங்கு-தமிழ் ஆகிய இரு மொழியில் உருவாகும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படங்களின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

Advertisement