நன்றி கடனுக்காக திருமணம் செய்து, அகந்தையால் கணவரை பிரிந்துவிட்டார் பிரியங்கா – பயில்வான் கிளப்பிய சர்ச்சை. வீடியோ இதோ.

0
870
Priyanka
- Advertisement -

பிரியங்கா விவகாரத்து பெற்றுவிட்டார் என்று நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மிழில் வில்லன் நடிகராக பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் பத்திரிகையாளராகவும் இருந்து வருகிறார். அதேபோல நடிகர்கள் நடிகைகள் குறித்தும் அடிக்கடி பல்வேறு சர்ச்சையான விஷயங்களை கூறி பிரபலமடைந்தவர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் சமீபத்தில் இவர் சினிமாவில் வாய்ப்பை பெற பல நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து வருவதாவும், மேலும் வாய்ப்புகளை பிடிக்கவே தங்கள் சமூக வலைதளத்தில் பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுகின்றனர்.

-விளம்பரம்-

அந்த காலத்தில் இருந்த நடிகைகள் எல்லாம் வெறும் திறமையை மட்டுமே நம்பி இருந்தார்கள். ஆனால், இப்போது இருக்கும் நடிகைகள் தங்கள் கவர்ச்சியை நம்பி இருக்கின்றனர். பட வாய்ப்பை பெற உடலை காட்டி போட்டோ ஷூட்களை செய்து அதிலும் பணம் தேடுகிறார்கள் என்று அமலா பால், தமன்னா, ராஷ்மிகா, ஷாலினி பாண்டே, மாளவிகா மோகனன், ரெஜினா என்று பல முன்னணி நடிகைகளின் பெயரை சொல்லி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

- Advertisement -

நாடு ரோட்டில் சண்டையிட்ட ராதிகா :

அதே போல சமீபத்தில் கூட ராதிகாவின் அம்மாவை பற்றி தவறாக பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பீச்சில் வால்கிங் சென்ற போது இவரை பார்த்த ராதிகா இவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் கூட ஈடுபட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் விஜய் டிவி தொகுப்பாளினியும் பிக் பாஸ் போட்டியாளருமான பிரியங்கா விவகாரத்து செய்துவிட்டார் என்றும் அதற்கான காரணம் குறித்தும் பேசி இருக்கிறார்.

பிரியங்கா விவகாரத்து செய்துவிட்டாரா ?

இதுகுறித்து பேசியுள்ள அவர், விஜய் டிவியில் வேலை செய்பவர் தான் பிரியங்காவின் கணவர் பிரியங்கா. மேலும், விஜய்டிவிக்கு பிரியங்காவை அவர் தான் அடையாளம் காட்டினார். அந்த நன்றி கடனுக்காக தான் பிரியங்கா அவரை திருமனம் செய்துகொண்டார். இருவரும் சில காலம் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்தனர். ஆனால், அவரை விட பணமும் புகழும் அதிகரித்தது. இதனால் பிரியங்காவிற்கு அகந்தை ஏற்பட்டுவிட்டு இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது.

-விளம்பரம்-

பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் பிரியங்கா :

இவர்கள் இருவரும் பல மாதங்களாக பிரிந்துதான் வாழ்ந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில்தான் பிரியங்காவிற்கு பிக்பாஸில் இருந்து அழைப்பு வந்தது அங்கேயும் தன்னுடைய கணவர் பற்றி எதுவும் பிரியங்கா பேசவில்லை மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் பரிசை ராஜுவும் இரண்டாம் பரிசை பிரியங்காவும் பெற்றார்கள். பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிரியங்கா கணவரை பார்க்க தானே சென்றிருக்க வேண்டும் ஆனால், அவர் நேராக தாய் வீட்டுக்குத் தான் சென்றாரே தவிர கணவர் வீட்டிற்கு செல்லவில்லை.

குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு :

இதனால் பல பிரியங்காவின் ஆர்வலர்கள் பிரியங்கா கணவரை பிரிவதற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாகவும், குடும்ப நீதிமன்றத்தில் இந்த வழக்கு இருப்பதாகவும் கூறுகிறார்கள். கணவர் மீது பிரியம் இருந்திருந்தால் பிக்பாஸில் இருந்து வெளியில் வந்தவுடன் கணவரை சென்று பார்த்து இருக்க வென்றும். இல்லை, அவருடைய கணவர் பிரியங்காவை வந்து பார்த்து இருப்பார். ஆனால், இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்பதால் தான் இந்த பிரச்சனை எழுந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Advertisement