அட, கெளதம் கார்த்திக்கின் இந்த சூப்பர் ஹிட் பாடலில் பிரியங்கா பாடி இருக்கிறாரா. யூடுயூபில் பேரே இருக்கு பாருங்க.

0
379
priyanka
- Advertisement -

விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அந்த வகையில் விஜய் டிவி தொகுப்பாளினி என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது பிரியங்கா தான். இவரை விஜய் டிவியின் சொத்து என்றே சொல்லலாம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். பின் இவருடைய நகைச்சுவைப் பேச்சும், பாடி லாங்குவேஜ் மூலமாக விஜய் டிவியில் பிரபலமாகவே மாறிவிட்டார்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாக தொகுத்து வழங்கி வந்தார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரியங்கா கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இவருடைய சேட்டையும், காமெடியும் மக்கள் மத்தியில் ரசிக்க வைத்து வந்தாலும் இவரை சிலர் விமர்சனம் செய்தும் வருகிறார்கள். இந்த நிலையில் இவரை குறித்து ஒரு புதிய தகவல்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது.

இதையும் பாருங்க : இரவோடு இரவாக நடிகர் விஜய் வீட்டில் நடந்த திடீர் சோதனை – பின்னணி என்ன?

- Advertisement -

அது என்னவென்றால், பிரியங்கா அவர்கள் தேவராட்டம் படத்தில் ஒரு பாடலில் ஒரு வரி பாடி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் தேவராட்டம். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். அடிதடி, குடும்ப செண்டிமெண்ட் என்ற கதைக்களத்தை மையமாகக் கொண்ட படமாக தேவராட்டம் அமைந்து இருந்தது.

இந்நிலையில் தேவராட்டம் படத்தில் மதுர பளபளக்குது என்ற ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும். அந்த பாடலில் ‘ரங்கு சிலுக்குதான் சிக்குன்னு சமஞ்சு வந்தாளாம்’ என்ற வரியை மட்டும் தொகுப்பாளினி பிரியங்கா பாடி இருந்தாராம். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் இத்தனை நாள் இது தெரியாமல் போய்விட்டதே! என்று அந்த வரியை ஹேஸ்டேக் செய்து சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்க் ஆக்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement