இப்படி விளையாட்றதுக்கு வேற ஏதாவது பண்ணலாம் – கடுப்பான ஆரி.

0
1252
aari

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வெற்றிகரமாக இரண்டு வாரத்தை நிறைவு செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் வார எலிமினேஷன் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்று இருந்தது. இதில் நடிகை ரேகா பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டு இருந்த பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் முதல் வாரத்தில் வயதானவர்களும் அல்லது பெண்கள்தான் வெளியேறுவார்கள் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது அது இந்த சீசனுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன ?

கடந்த திங்கள் கிழமை இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரியோவும் கடந்த வாரம் டாஸ்க்கில் வெற்றி பெற்ற சனம் ஷெட்டி மற்றும் வேல்முருகன் ஆகிய இருவர்களையும் யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடந்த நாமினேஷன் அடிப்படியில் சுரேஷ், ஆரி, ஆஜீத் அனிதா, பாலாஜி ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் ஆஜீத்திடன் Eviction Free Pass இருக்கிறது என்பது குறிப்பிடத்க்கது. தற்போது பிக் பாஸ் வீட்டில் அரக்கர்கள் மற்றும் அரசர்கள் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சுரேஷ் அரக்கர் அணியிலும் ரியோ அரசர் அணியிலும் இருப்பது தான் ஹைலைட்டே.

- Advertisement -

நேற்றைய நிகழ்ச்சில் பாலாஜி, சோம் சேகர் ஆகியோர் அரக்கர்களிடம் தோற்று விட்டார்கள். சனம் ஷெட்டி, சம்யுக்தா, ரியோ ஆகியோர் வெற்றி பெற்றனர். இன்னும் ரம்யா, நிஷா, வேல்முருகன் மட்டும் இந்த டாஸ்கில் ஆடாமல் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அரக்கர்கள் ராஜாவாகவும், ராஜாக்கள் அரக்கர்களாகவும் மாறியுள்ளார்கள்.

Advertisement