அர்ச்சனாவிற்கு பதிலடி கொடுத்த பாலாஜி. இந்த வாரம் இவங்க முட்டிப்பாங்களோ.

0
539
bala
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் மூன்றாவது வாரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது இதுவரை ரேகா மட்டும் வெளியேறி இருக்கும் நிலை இந்நிலையில் கடந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளராக பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா உள்ளே நுழைந்தார். பொதுவாக வைல்ட் கார்ட் போட்டியாளர் உள்ளே நுழைந்த பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் சூடு பிடிக்கும். ஆனால் அர்ச்சனா வைல்ட் கார்ட் போட்டியாளரராக உள்ளே நுழைந்த பின்னர் அப்படி எதுவும் பெரிய சம்பவம் நடக்கவில்லை.

-விளம்பரம்-

அதேபோல பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த ஒரு சில நாட்களிலேயே இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளர்கள் நுழைந்து விடுவார்கள். அந்த வகையில் இந்த சீசனில் யார் இரண்டாவது வைல்டுக் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.இந்த சீசன் ஆரம்பித்த ஓரிரு தினங்கள் மிகவும் சலிப்பாக சென்றுகொண்டிருந்தது. ஆனால், சுரேஷ் சக்கரவர்த்தி செய்த சில சேட்டைகளால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் சூடு பிடித்தது.

- Advertisement -

ஆரம்பத்தில் இவருக்கும் அனிதாவிற்கும் இடையே ஒரு பிரச்சினை வெடித்தது. அது ஓரிரு நாட்கள் சென்று கொண்டிருந்தது. அதன் பின்னர் இவருக்கும் சனம் ஷெட்டிக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அந்த பிரச்சனை நேற்று பூதாகாராமாக வெடித்தது. சமீபத்தில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்து இருந்தார் பிக் பாஸ். சமீபத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் சனம் ஷெட்டி, சுரேஷ் சக்ரவர்த்தியை வாடா போடா என்று திட்டி தீர்த்தது பலரையும் அதிர்ச்சி ஆக்கியது.

இன்றைய முதல் பிரம்மாவின் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று முதல் 16 வரை தங்களை வரிசைப்படுத்தி கொள்ளுமாறு கோரப்பட்டிருந்தது. இதில் இறுதியில் வரும் போட்டியாளர் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளராக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதில் சுரேஷ் சக்கரவர்த்தி கடைசி இடத்தில் இருக்கிறார் என்பது அந்த ப்ரோமோ மூலம் தெரிந்தது. இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் பாலாவின் கோபப்படும் குணம் குறித்து கூறுகிறார்கள். இதனால் கடுப்பான பாலா என்னால் கோபப்படாமல் இருக்க முடியாது கோபப்படுவது ஒரு குறையும் கிடையாது என்று கூறி இருந்தார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாலாஜி, அர்ச்சனாவை குறை கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement