பிக் பாஸ் வீட்டில் நவராத்திரி கொண்டாட்டம் – இன்னிக்கி இத்தனை மணி நேரமாம்.

0
497
BiggBoss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமான மூன்று வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இந்த மூன்று வாரத்தில் அன்பு, சண்டை, பல பஞ்சாயத்துக்கள் அரங்கேறி இருந்தது. நாளுக்கு நாள் பிக் பாஸின் சுவாரசியம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. கடந்த வாரம் நாமினேஷனில் பாலாஜி, சுரேஷ், சக்ரவர்த்தி, ஆஜீத், அனிதா சம்பத், ஆரி ஆகியோர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் நேற்றைய நிகழ்ச்சியில் ஆஜீத் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், ஆஜீத் தன்னிடம் இருந்த ‘ஏவிக்ஷன் ப்ரீ பாஸ்’ ஐ வைத்து தப்பித்துவிட்டார். அஜீத் ‘ஏவிக்ஷன் ப்ரீ பாஸ்’ ஐ வைத்து தப்பித்து விட்டதால், ஆஜீத்திற்கு அடுத்தபடியாக குறைவான வாக்குகளை பெற்ற அனிதா சம்பத் அல்லது சுரேஷ் சக்ரவர்த்தி இருவரில் யாரவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வாரம் யாரும் எலிமினேட் ஆகவில்லை என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் கமல்.

- Advertisement -

இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற இருக்கிறது. அதில் இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்ச்சனாவை யாரும் நாமினேட் செய்ய முடியாது. இது ஒரு புறம் இருக்க நவராத்திரி விழாவின் சிறப்பு கொண்டாட்டமாக இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி 6.30 மணி முதல் 10.30 வரை 4 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement