கால் சென்டர் டாஸ்கில் தோற்று, அடுத்து நிமினேட் ஆன நபர் யார் தெரியுமா ?

0
784
bigg
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் 50 நாட்களுக்கு மேல் கடந்து கிட்டத்தட்ட பாதி சீசனை முடிவு செய்து இருக்கிறது. இதுவரை பாதி சீசனை கடந்தாலும் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்தி, சுசித்ரா என்று முன்றே நபர்கள் தான் வெளியேறியுள்ளனர். இது போக இன்னும் ஒரு வைல்டு கார்டு போட்டியாளராக கடைக்குட்டி சிங்கம் சீரியல் நடிகர் அஸீம் வர இருப்பதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீடு கால் சென்டராக மாறியுள்ளது. இதில் கால் சென்டரில் இருக்கும் நபர்களின் என்ன வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்.

-விளம்பரம்-

இதில் முதலில் போனை துண்டிக்கிறார்களோ அவர்கள் அடுத்த வார நம்நினேஷனில் இடம்பெறுவார்கள். இதுவரை அர்ச்சனா, சனம் ஷெட்டி, கேப்ரில்லா, ரம்யா பாண்டியன் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். அதே போல நேற்றய நிகழ்ச்சியில் ரியோ, அஜீத்திற்கு கால் செய்து இருந்தார். அப்போதும் மற்றவர்களை பற்றி பேசியதால் இந்த டாஸ்க் முடிந்ததும் பெரிய பஞ்சாயத்தில் சிக்கினார் ரியோ. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நிஷா, கழுத்தில் நாமினேஷன் போர்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

- Advertisement -

இது ஒருபுறம் இருக்க நிவர் புயலால் பெய்த கனமழை காரணமாக பிக் பாஸ் வீட்டில் மழை நீர் புகுந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அதே போல பிக் பாஸ் அமைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில்தான் செம்பரம்பாக்கம் ஏரி அமைந்து இருக்கிறது. வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததுவிட்டதாலும், செம்பரம்பாக்கம் ஏரி மிக அருகில் இருப்பதாலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தாங்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறினார்களாம். இதனால் உடனடியாக முடிவெடுத்த சேனல் நிர்வாகம் அவர்களை நேற்று முன்தினம் நான்கு வாகனங்களில் அழைத்துச் சென்று பிரபல தனியார் ஹோட்டலில் தங்க வைத்து இருக்கிறதாம்.

நேற்று வரை அவர்கள் ஹோட்டலில் தான் தங்க வைக்கப்பட்டதாகவும், இதனிடையே பிக் பாஸ் வீட்டில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் பிக்பாஸ் குழு தீவிரமாக ஈடுபட்டுபட்டனர் என்றும் கூறப்பட்டது. எனவே கடந்த இரண்டு நாட்களாக ஒளிபரப்பாக இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் படப்பிடிப்புகள் நடக்கவில்லையாம். எனவே கடந்த புதன் கிழமை வரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து ஒளிபரப்ப திட்டமிட்டு இருக்கிறதாம் பிக்பாஸ். அதனால்தான் இன்றும் அதே கால் செண்டர் டாஸ்க் நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-
Advertisement