விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். , இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.
நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆரி, ஆஜித், சிவானி, கேப்ரில்லா, அனிதா, சம்பத் ஆகியோர் நாமினேட் ஆகியிருந்தார்கள். எனவே, கடந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி இருந்தது அனிதா சம்பத் அல்லது ஆஜித் ஆகிய இருவரில் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது அதற்கு ஏற்றார் போல அனிதா சம்பத் தான் வெளியேறி இருந்தார். உண்மையில் அனிதா சம்பத் கடந்த வாரம் கொஞ்சம் அடக்கி வாசித்திருந்தால் கண்டிப்பாக அவர் வெளியேறி இருக்க மாட்டார்.
இப்படி ஒரு நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாராதிக்கான நாமினேஷன் நடைபெற இருக்கிறது. இந்த வாரம் ஆரி தலைவர் ஆகி இருத்தால் அவரை இந்த வார நாமினேஷனில் இல்லை. இன்று வெளியாகி இருந்த முதல் ப்ரோமோவை வைத்துப் பார்க்கும் போது இந்த வாரம் ஆஜீத், கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா ஆகியோர் நாமினேட் ஆகி இருப்பது போலத் தான் தெரிகிறது. ஒரு வேலை அப்படி இருந்தால் ஆஜீத் , அல்லது ஷிவானி வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் இதுவரை சீக்ரெட் ரூம் பயன்படுத்தப்பட வில்லை. எனவே, இந்த சீசனில் சீக்ரெட் ரூம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், டிக்கெட் டு பின்னாலே டாஸ்க்கும் நடத்தப்படவில்லை. மேலும், இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டிற்கு வர இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஆரி பற்றி ஷிவானி மற்றும் ரம்யா ஆகியோர் புறம் பேசி உள்ளார்கள்.