தலைவர் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேபி, சோம், ஆஜீத். இது தான் டாஸ்க்.

0
634
biggboss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 5 வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா மற்றும் வேல்முருகன் வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சுரேஷ் வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்ட் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார்கள். தற்போது இருக்கும் நிலையில் 15 போட்டியாளர்களும் அப்படியே இருக்கின்றனர் ஆனால் 5 வாரம் நிறைவேறிவிட்டது. இந்த ஐந்து வாரத்தில் வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு பெரிய பிரச்சனை வெடித்து விடுகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த இரண்டு வாரத்திற்கு வாரம் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜிக்கு இடையிலான பிரச்சனை தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதே போல ஆரி, இனிமேல் யார் யார் என்னென்ன செய்கிறீர்கள் என்பதை நெத்தி பொட்டில் அடித்தது போல சொல்வேன் என்றார்.அதற்கு ஏற்றார் போல இந்த வாரம் முழுக்க பல இடங்களில் பல உண்மைகளை தைரியமாக கூறியிருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட மூன்று போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

- Advertisement -

அதில் ஆரி, நிஷா, சோம் சேகர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் டாஸ்க் மூலம் ஆரி அடுத்த வார கேப்டனாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.அதே போல இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கி இருந்தது. இதில் ஆரி இந்த வார தலைவர் என்பதால் அவரை இந்த வாரம் நாமினேட் செய்ய முடியாது. இந்த வாரம் நடைபெற்றுள்ள நாமினேஷனில் பாலாஜி, சம்யுக்தா, ஷிவானி, அனிதா, கேப்ரில்லா, சுசித்ரா, அர்ச்சனா, ரம்யா, அஜீத் என்று 9 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். ஆனால், இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது .

இப்படி ஒரு நிலையில் இன்று வெளியான முதல் பர்மாவில் இந்த வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட மூன்றுபேரை போட்டியாளர்கள் தேர்வு செய்தார்கள் அதில் அஜித் கேப்ரில்லா மற்றும் சோம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது இரவில் அடுத்த வார தலைவர் காண போட்டியில் இவர்கள் மூவரும் கலந்து கொண்டு விளையாடி இருக்கிறார்கள் இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-விளம்பரம்-
Advertisement