சின்னத்திரை தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி2, சரவணன் மீனாட்சி 3 போன்ற சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். இறுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து வந்தார்.
இந்த தொடர் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் ஒளிபரப்பப்பட்டது. . இதில் மிர்ச்சி செந்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரக்ஷிதா நடித்து வந்தனர். இவர்களுடைய ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும், பல திருப்பங்களுடனும், விறுவிறுப்புடனும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் சென்று கொண்டிருந்தது.
NINIல் இருந்து விலகிய ரக்ஷிதா :
இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து ரக்ஷிதா விலகுவதாக அறிவித்தார் ரஷிதா. இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். அதோடு இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். கடைசியாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இது சொல்ல மறந்த கதை சீரியலில் நடித்தார். ஆனால், அந்த சீரியலும் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சி :
இதனால் மனம் நொந்து போனார் ரஷிதா. இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கடைசி வரை தனது உண்மையான முகத்தை காட்டவே இல்லை. இதனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் வேறு எந்த தொடரிலும் கமிட் ஆகவில்லை. மேலும், ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
ரஷிதாவின் பழைய வீடியோ :
இந்த நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது இது எது என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்ற வீடியோ ஒன்று வாயிலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரட்சிதா தற்போதை விட மிகவும் கருப்பாக இருக்கிறார். இந்த வீடியோவிற்கு கீழ் ரசிகர்கள் பலரும் ‘காசு பணம் வந்தால் காக்கா கூட கலர் ஆகிவிடும் என்பது உண்மைதான் போல’ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
கணவருடன் பிரிவு :
ஆனால், வேறு சில ரசிகர்கள் இது அவர் சரவணன் மீனாட்சி படப்பிடிப்பிலிருந்து அப்படியே வந்தபோது எடுத்த ஷூட்டிங் என்றும் கூறி வருகிறார்கள். ரக்ஷிதா பிக் பாஸில் இருந்த போதே தனது கணவர் குறித்து பெரிதாக பேசவில்லை. இதனால் இவர் கணவரை பிரிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் தனது கணவர் தன்னை தொல்லை செய்கிறார் என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார் ரஷிதா. மேலும், இனி ரஷிதாவுடன் சேர வாய்ப்பே இல்லை என்று தினேஷும் கூறிவிட்டார். “