ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக சொன்ன ரைசா உதட்டில் வெட்டு. காரணம் இது தானாம்.

0
44532
raiza

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு நபர்களுக்கு சினிமாவில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது அந்த வகையில் முதல் சீசனில் பங்கேற்ற பெரும்பாலானோர் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள் ஆனால் முதல் சீசனில் பங்குபெற்ற பெண் போட்டியாளர்களில் அதிக படங்களில் நடித்து வருபவர் நடிகை ரைசா தான். மாடல் அழகியான ரைசா தமிழில் அறிமுகமான தனுஷ் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி என்ற படத்தின் மூலம் தான்.

- Advertisement -

நடிகை ரைசா வில்சன் பெங்களூரை சார்ந்தவர். மேலும், ரைசா அவர்கள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க தொடங்கினர். அதற்கு பின் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களில் நடித்தும், மாடலிங் செய்தும் வந்தார். அதுமட்டும் இல்லாமல் ரைசா அவர்கள் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்கில் மேலாளராகப் பணிபுரிந்து இருக்கிறார். இதனைத்தொடர்ந்து ரைசா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் அழகி போட்டியில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார்.

இதையும் பாருங்க :இறுதியில் தளபதி விஜய் மடியில் கைவைத்த நித்யாநந்தா. கடுப்பில் விஜய் ரசிகர்கள்.

ஆனால், இவருக்கு மிகப் பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தித் தந்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஹரிஷ் கல்யாண் உடன் இவர் இணைந்து நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. அதிலும் இந்த திரைப்படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாவதாக இருந்த வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரைசா.

-விளம்பரம்-

பியார் பிரேமா காதல் படத்தில் இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரிக்கு வார்த்தைகளே இல்லை. அந்த அளவிற்கு இருந்தது. தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ரைசா கூறியது, நான் ஹரிஷ் கல்யாணை டேட்டிங் செய்ய விரும்புகிறேன். மேலும், இது தமிழ்நாடு மக்களுக்கான என்னுடைய பதிவு என்று வெளிப்படையாக போட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் உறைந்து போய் உள்ளார்கள் என்றும் சொல்லலாம். மேலும், ஏன் இவர் இப்படி போட்டுள்ளார்?? மீண்டும் இவர்கள் காதலித்து வருகிறார்களோ?? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

This image has an empty alt attribute; its file name is 1-61-1024x819.jpg

இந்த நிலையில் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியட்டுள்ளார். மெத்தையில் படுத்துக்கொண்டு செல்பி எடுத்த போது செல்போன் கையில் இருந்து நழுவி தனது வாயில் விழுந்ததில் உள் உதட்டை கிழித்து விட்டதாகவும் இதனால் காயம் ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார், ஆனால், இந்த புகைப்படத்தை கண்ட பலரும் யார் இந்த காயத்திற்கு காரணம். ஒரு வேலை நீங்களும் ஹரிஷ் கல்யானும் டேட்டிங் சென்ற போது இப்படி ஆகிவிட்டதா என்று கிண்டலடித்து வருகின்றனர்.

Advertisement