விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை மூன்று சீசன்கள் கடந்தாலும், ரசிகர்களுக்கு பிடித்தது என்னவோ பிக் பாஸ்ஸின் முதல் சீசன் தான். பிக் பாஸ்ஸின் முதல் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால், ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக, விளம்பரங்கள், படங்கள் என்று வாய்ப்புக்கள் இவரை தேடி வந்தது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வி ஐ பி- 2 படத்தில் கூட கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார்.மேலும் , பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மற்றுமொரு போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன், ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் பாருங்க : சுந்தர் சியின் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்ட குஷ்பூ. ப்பா, எப்படி இருக்கார் பாருங்களே.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் ஜி வி பிரகாஷுடன் ‘காதலிக்க நேரமில்லை’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் ரைசா. அது போக ரைசா, ஆலிஸ் என்ற படத்தில் நடிகை ரைசா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பியார் பிரேமா காதல் படத்தில் இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரிக்கு வார்த்தைகளே இல்லை.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதுவும் தற்போது ஊரடங்கில் போரடித்து போயுள்ள ரைசா அடிக்கடி தனது பழைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரைசா ” இது நான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?” என்று கேட்டுள்ளார்.