விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரைசாவும் ஒருவர். நடிகை ரைசா வில்சன் பெங்களூரை சார்ந்தவர்.மேலும், ரைசா அவர்கள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க தொடங்கினர்.அதற்கு பின் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.
இதனை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களில் நடித்தும், மாடலிங் செய்தும் வந்தார். அதுமட்டும் இல்லாமல் ரைசா அவர்கள் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்கில் மேலாளராகப் பணிபுரிந்து இருக்கிறார்.2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார். அதன் பின்னர் தான் பிக் பாஸில் பங்குபெற்றார்.
ஆனால், பிக் பஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரைசா ‘வர்மா’ படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகரான விஜய் தேவர்கொண்ட நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படம் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் ட்ரைலர் வரை அனைத்தும் வெளியான நிலையில் கடந்த ஆண்டு படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருந்தது.
ஆனால், படத்தின் இறுதி ரிசல்ட் திருத்திகாரமாக இல்லை என்று இந்த படத்தை திரையரங்கில் வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த படம் நேற்று OTT தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்களின் மோசமான விமர்சனத்தை பெற்றுள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் ரைசா நடித்த நீச்சல் குள காட்சியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.