இங்க அவன் அவனுக்கு என்ன பிரச்சன போது நீ பிரியாணி ருசி பத்தி பேசிட்டு இருக்க – ரைசாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.

0
2422
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. என்னதான் 4 சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரைசாவும் ஒருவர். நடிகை ரைசா வில்சன் பெங்களூரை சார்ந்தவர். மேலும், ரைசா அவர்கள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க தொடங்கினர்.

-விளம்பரம்-

அதற்கு பின் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களில் நடித்தும், மாடலிங் செய்தும் வந்தார். ரைசா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார். 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார். அதன் பின்னர் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் பாருங்க : வருத்தப்படாத வாலிபர் சங்கம் முன்பே சீரியலில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ள ஸ்ரீதிவ்யா. இதோ வீடியோ.

- Advertisement -

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அடிக்கடி எதாவது பதிவிட்டு சிக்கலில் சிக்கிவிடுகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை ரைசா, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணியை விட சிறந்தது என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடுப்பாகி ரைசாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர் ஒருவர், இங்க அவன் அவனுக்கு yenna Prechana போது Chicken பிரியாணி pathi paesitu இருக்க என்று கமன்ட் செய்து இருந்தார்.

https://twitter.com/vjfan3000/status/1392481428097560578

இதற்கு பதில் அளித்த ரைசா, சரி, தயவுசெய்து என்னிடம் சொல்லுங்கள் – உங்கள் கருத்துப்படி (உங்கள் நம்பமுடியாத அறிவும் அனுபவத்தையும் வைத்து) இப்போது எதை பற்றி ட்வீட் செய்தால் பொருத்தமானது என்று. திரு …. பெயரிடப்படாதவரே என்று பதில் கூறியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகை ரைசா கண்ணுக்கு கீழ் இருக்கும் குழிகளை நிரப்ப பைரவி செந்தில் என்ற மருத்துவரின் கிளினிக்கில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

-விளம்பரம்-

இதனால் ரைசாவின் முகம் படு அலங்கோலமானது. இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட பைரவி செந்தில் தனக்கு சரியான பதில் கொடுக்கவில்லை என்று அவரிடத்தில் கோடி ரூபாய் நஷ்டயீடு கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருந்தார். பதிலுக்கு பைரவி செந்திலும் தன் மீதும் தனது கிளினிக் மீதும் ரைசா அபாண்டமாக பழி போடுகிறார் அவர் எனக்கும் 1 கோடி ருபாய் நஷ்டயீடு கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement