தமிழ் ,சினிமாவில் ஹோம்லியான லுக் இருந்த்தும் நிலைத்து நிற்க முடியாமல் இருக்கும் பல நடிகைகளில் நடிகை ஸ்ரீதிவ்யாவும் ஒருவர். நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீதிவ்யா ஹைதராபாத்தில் பிறந்தவர். அதுமட்டுமில்லாமல் ஸ்ரீதிவ்யா அவர்கள் மூன்று வயதிலேயே தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் என்றும் சொல்லலாம். இவர் பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும், 2010 ஆம் ஆண்டு தான் இவர் ‘மனசார’ எனும் தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமா திரை உலகில் அறிமுகமானார். பின் இவர் தமிழில் பென்சில், ஈட்டி, காக்கி சட்டை, வெள்ளைக்கார துரை, மருது என பல படங்களில் நடித்துள்ளார்.மேலும்,2013 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் என்பவர் இயக்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, சூரி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
இதையும் பாருங்க : பிஞ்சிலேயே பழுதுள்ள குட்டி வடிவேலு – 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் திடுக்கிடும் உண்மையை சொன்ன மருமகளே சோபி.
இந்த படத்திற்கு பிறகு தான் பல இடங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற சங்கங்களை இளைஞர்கள் புதிதாக துவக்கினார்கள் என்று கூட சொல்லலாம். அதன் பின்னர் இவர் ஜீவா, காஸ்மோரா, காக்கி சட்டை போன்ற பல்வேறு படங்களில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இருக்கு அதன் பின்னர் டாப் ஹீரோக்களின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வரிசையாக பட வாய்ப்புகளும் வரவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளாக இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.இப்படி ஒரு நிலையில், பாணா காத்தாடி பட இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்க உள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் நடித்த சீரியலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதுவும் இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிப்பதற்கு முன்பாக Thoorpu Velle Railu என்ற சீரியலில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார்.