யோகி பாபு தங்கச்சியா? ரைசாவின் புதிய ஹேர் ஸ்டைலை பங்கம் செய்யும் ரசிகர்கள்.

0
49853
Raiza-yogi

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைளில் ரைசா வில்சனும் ஒருவர். இவர் முதலில் மாடலிங் துறையில் தான் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இதனை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களில் நடித்தும், மாடலிங் செய்தும் வந்தார். மேலும், இவர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் போட்டியில் வெற்றியும் பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் தான் ரைசா வில்சன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும் அவரை பிரபலமாக்கியது தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

Image

- Advertisement -

ரைசா அவர்கள் 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரைசா அவர்கள் 2018 ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து “பியார் பிரேமா காதல்” என்ற படத்தில் முதன் முறையாக கதாநாயகியாக நடித்தார். இந்த படம் பெரிய அளவு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெற்றது. மேலும், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை ரைசா கவர்ந்தார்.

இதையும் பாருங்க : நான் லவ் பண்றேன் அது இவர்களுடைய கணவனுக்கு தெரியும் என்றார். பஞ்சாயத்தில் மேலும் ஒரு ஜீ தமிழ் நடிகை மின்னல் தீபா.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து ரைசா வில்சன் அவர்கள் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்ற தகவல் வந்து உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ரைசா வில்சன் தற்போது ஜீவி பிரகாஷ் உடன் காதலிக்க நேரமில்லை, விஷ்ணு விஷால் உடன் எப்ஐஆர், அலைஸ் என்று பல படங்கள் இவரரிடம் கைவசம் உள்ளது. சமீபத்தில் கூட ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தனுஷ் ராசி நேயர்களே படத்தில் கூட ரைசா ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா காதல் கிசுகிசு குறித்து பல சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

raiza

இவர் மாடலிங் என்பதால் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக புகைப்படங்களை பதிவிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை ரைசா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பலர் கிண்டலும் கேலியும் செய்து உள்ளனர். அதிலும் ஒரு சில பேர் நீங்கள் யோகிபாபுவின் தங்கச்சியா என்றும் கேட்டு உள்ளார்கள். அது என்னவென்றால் ரைசா அவர்கள் யோகி பாபுயின் ஹேர் ஸ்டைல் மாறி தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி புகைப்படம் எடுத்து உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து யோகி பாபு தலை முடிக்கு போட்டியாக ரைசா வில்சன் புகைப்படம் வெளியிட்டார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement