டெபாசிட் கூட வாங்கல, எதுக்கு இந்த சீன் ? போய் பிச்ச எடுத்து பொழைக்கலாம்லா – கேலி செய்தவருக்கு கேப்டன் மகன் கொடுத்த பதிலடி.

0
4940
vijayakanth
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்த். இவரது மகன் சண்முக பாண்டியனும் தமிழில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘சகாப்தம்’. இந்த படத்தினை இயக்குநர் சுரேந்திரன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக சண்முக பாண்டியன் நடித்திருந்தார். இது தான் சண்முக பாண்டியான் ஹீரோவாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம்.

-விளம்பரம்-

இதில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக நேஹா ஹிங்கே என்பவர் டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சுப்ரா ஐயப்பா, ரஞ்சித், தேவயாணி, ஜெகன், பவர் ஸ்டார் சீனிவாசன், சண்முகராஜன், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சண்முக பாண்டியனின் அப்பா விஜயகாந்தும் கெஸ்ட் ரோலில் வலம் வந்திருந்தார்.

இதையும் பாருங்க : பிரபல நடிகரின் பேரனை காதலித்து திருமணம் செய்த மதுவந்தி – யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க.

- Advertisement -

விஜயகாந்தின் மற்றொரு மகனான விஜய பிரபாகரன் தற்போது தந்தை வழியில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். விஜயகாந்துக்கு பின்னர் இவர் தான் அந்த கட்சியை வழி நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலின் போது இவர் மேடையில் பேசிய ‘மாஸா, கெத்தா, கேப்டனா, ஓஹோய்’ என்ற வீடியோ படு வைரலானது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தே மு தி க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

60 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க 2,00,156 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியைச் சந்தித்தது. இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒருவர், விஜயபிரபாகரனை, டெபாசிட் கூட வாங்கல எதுக்கு இந்த வெட்டி சீன். போய் பிச்ச எடுத்து பொழைக்கலாம் இல்ல என்று கமன்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த விஜயபிரபாகர், உங்களின் மதிப்பு மிக்க கருத்திற்கு நன்றி உங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டதுபோல ‘முடியாது என்பது எதுவுமே கிடையாது’ அதுமட்டுமல்ல பிச்சை எடுத்து இருந்தா நாங்க அரசியல்ல வேற லெவல் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement