தமிழகமே தண்ணீருக்கு அலையும் நிலையில் ரைசா செய்த செயல்.! பார்த்தால் கழுவி ஊற்றுவீங்க.!

0
5786
raiza

தண்ணீர் தட்டுப்பட்டால் தமிழகம் தத்தளித்து வருகின்றது. சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அரசும், சமூக ஆர்வலகர்களும் அறிவுறுத்துக்கொண்டு தான் வருகிறது.

ஆனால், இந்த நிலையில் தனது வளர்ப்பு நாய்காக பிக் பாஸ் ரைசா செய்துள்ள செயல் மிகவும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ரைசா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஓவியாவிற்கு பிறகு அதிக ரசிகர்களை பெற்றவரும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : என்னிடம் ஆட்டோகிராப் கேப்பீங்க.! அப்போதே கூறியுள்ள லாஸ்லியா.!வைரலாகும் வீடியோ.! 

- Advertisement -

இவருக்கென சமூகவலைதளத்தில் ஒரு சில ஆர்மி கூட உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் விஐபி-2 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், அதன் பின்னர் ஹரிஷ் கல்யானுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றிருந்தது. பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார் நடிகை ரைசா. தற்போது ஜிவி பிரகாஷ் நடித்துவரும் ‘காதலிக்க யாரும் இல்லை’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், ஆலிஸ் என்ற படத்திலும் லீட் ரோலில் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது நடவடிக்கைகளை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தனது வளர்ப்பு நாய் மீது தண்ணீரை பீச்சி அடித்து அதனை குதூகலபடுத்தியுள்ளார். தமிழகமே தண்ணீருக்கு அவதிப்படும் நிலையில் ரைசாவின் இந்த பதிவு பலரையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement