ஆங்கர் வாய்ப்பு கொடுத்ததும், ஆர்வக்கோளரில் படக்குழுவிற்கு முன்பாக வாரிசு இசை வெளியிட்டு விழா தேதி குறித்து ட்வீட் செய்து பின் டெலீட் செய்த ராஜு.

0
332
varisu
- Advertisement -

வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற இருக்கும் தேதி குறித்து பதிவிட்டு பின்னர் அதனை அவசர அவசரமாக டெலீட் செய்து இருக்கிறார் பிக் பாஸ் ராஜு. தற்போது விஜய் வாரிசு படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையில் வெளியாக இருக்கிறது. மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாக ஏற்கனவே பிரச்சனை தொடங்கியது. பொங்கல் பண்டிகைகளில் தெலுங்கு படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது.

-விளம்பரம்-
varisu

இதை தொடர்ந்து வாரிசு திரைப்படத்திற்கு தமிழகத்தில் குறைவான திரையரங்குகள் தான் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசி இருந்தார். உதயநிதி ஸ்டாலின் துணிவு படத்தை வெளியிடுவதால் தான் வாரிசு படத்திற்கு குறைவான திரையரங்குகள் அளிக்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் இருந்தது. இப்படி ஒரு நிலையில் சென்னை செங்கல்பட்டு நார்த் ஆர்காடு சவுத் ஆர்காடு கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் வாரிசு பணத்தை வெப்சைட் நிறுவனம் வெளியிடும் என்று அறிவிப்புகள் வெளியானது.

- Advertisement -

பொதுவாக விஜய் படங்களுக்கு பிரச்சனைகள் எழுவது வாடிக்கையான ஒன்று தான். மேலும், அப்படி படத்திற்கு பிரச்சனை வரும் போதெல்லாம் இசை வெளியீட்டு விழாவில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் எதையாவது பேசிவிடுவார். இதனாலேயே விஜய் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் வாரிசு படத்துக்கும் பல பிரச்சனைகள் சென்று கொண்டு இருக்கிறது.

அதனால் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இப்படி ஒரு பிக் பாஸ் ராஜு வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தான் தான் தொகுப்பாளராக பணியாற்றப் போவதாகவும் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற இருப்பதாக பதவு ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதனால் ரசிகர்கள் பலரும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், ராஜு போட்ட இந்த பதிவை சில நிமிடங்களிலேயே டெலிட் செய்துவிட்டார். அதற்கு முக்கிய காரணமே படக்குழுவே இன்னும் வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழா குறித்து அறிவிக்காத நிலையில் ஆங்கர் வாய்ப்பு கிடைத்ததும் ஆர்வக்கோளாறில் ராஜு இப்படி பதிவிட்டு பின்னர் அதனை அவசர அவரசமாக டெலீட் செய்து இருக்கிறார்.

Advertisement