காதலர் தினத்தில் கணவரை பிரிவதாக அறிவித்த பிக் பாஸ் நடிகை – சர்ச்சைக்கு பேர் போனவர்.

0
623
- Advertisement -

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சினிமா பிரபலங்களின் விவாகரத்து விவகாரம் தான் உலா வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு முழுவதும் நாகசைதன்யா – சமந்தாவின் விவாகரத்து தான் சோசியல் மீடியாவில் டாப்பில் இருந்தது. அவர்களை தொடர்ந்து தனுஷ் – ஐஸ்வர்யா உடைய விவாகரத்து பலரும் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் தற்போது பிரபல ஹிந்தி நடிகை ராக்கி சாவந்த் விவாகரத்து செய்ய இருப்பதாக பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுவும் காதலர் தினத்தில் தன்னுடைய கணவரை பிரிய இருப்பதாக பிரபல நடிகை ராக்கி சாவந்த்தின் பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் ராக்கி சாவந்த். இவர் நடிகை மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார்.

-விளம்பரம்-

இவர் நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர், அழகு பதுமை, நாட்டிய கலைஞர் என பல துறைகளில் பங்கு பெற்று வருகிறார். இவர் 1997 ஆம் ஆண்டு தான் மீடியாவிற்குள் நுழைந்தார். அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் இந்தி மொழியில் மட்டுமில்லாமல் கன்னடம், மராத்தி, தெலுங்கு, தமிழ் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அதுவும் தமிழில் இவர் என் சகியே, முத்திரை, கம்பீரம் போன்ற சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.

- Advertisement -

ராக்கி சாவந்த் திரைப்பயணம்:

அதுமட்டுமில்லாமல் ராக்கி சாவந்த் எப்போதும் சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர்.
இவரை குறித்து ஏதாவது ஒரு சர்ச்சை சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டே இருக்கும். இதனிடையே நடிகை ராக்கி சாவந்த் அவர்கள் தொழில் அதிபர் ரிதேஷ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து நடிகை ராக்கி கூறியிருந்தது, எனக்கு திருமணமாகி விட்டது. அதை உறுதி செய்ய தான் இந்த பதிவு போட்டிருக்கிறேன். என்னுடைய கணவர் பெயர் ரிதேஷ்.

ராக்கி- ரிதேஷ் திருமணம்:

அவர் தொழிலதிபர். லண்டனில் வசிக்கிறார். திருமணம் முடிந்ததும் ரிதேஷ் லண்டன் சென்று விட்டார் என அற்புதமான கணவர் கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி என்றெல்லாம் கூறி இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார். மேலும், நடிகை ராக்கி திருமணத்திற்கு பிறகும் சினிமாவிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வந்தார். பின் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 15ல் நடிகை ராக்கி கலந்து கொண்டார். ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரை குறித்து பல பிரச்சினைகளும் சர்ச்சை எழுந்திருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகும் இவரைக் குறித்த பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்தது.

-விளம்பரம்-

ராக்கி- ரிதேஷ் குடும்பம்:

அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ராக்கிக்கும், ரிதேஷுக்கும் இடையே பல்வேறு கருத்துகள் ஏற்பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அது மட்டுமில்லாமல் ரிதேஷ் ஏற்கனவே முதல் திருமணம் ஆனவர். இதனால் இவருடைய முதல் மனைவிக்கும் ரிதேஷுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனால் ராக்கி சாவந்த்க்கும்,ரிதேசுக்கும் இடையே பல பிரச்சனைகள் வந்தது. இந்த நிலையில் இன்று ராக்கி சாவந்த் அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் கணவரை பிரிந்து விட்டதாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். இன்று உலகமே காதலர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள். பிரிந்த காதல் கூட சேரும்இந்த நாளில் ராக்கி தன்னுடைய கணவரை பிரிப்பதாக பதிவு போட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.

நடிகை ராக்கி விவாகரத்து பதிவு:

அவர் அந்த பதிவில் கூறியிருப்பது, எங்களை மீறி பல சம்பவங்கள் நடந்து விட்டது. இருவரும் கருத்து வேறுபாடுகளை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்தோம். ஆனால், முடியவில்லை. இதனால் தான் நான் என் கணவரை பிரிய முடிவு செய்தேன். அதோடு நாங்கள் இருவரும் சுகமாகப் பேசி பிரிந்து விட முடிவு எடுத்திருக்கிறோம். அது மட்டும் இல்லாமல் தனியாக வாழ்க்கையிலே என்ஜாய் செய்வோம். அதுவும் இந்த காதலர் தினத்தில் இப்படி ஒரு முடிவு எடுத்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார். இப்படி இவரின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஏன் என்னாச்சு? என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement